நிதி ஒதுக்கீட்டில் புறக்கணிப்பு, டங்ஸ்டன் ஏல விவகாரம், மீனவா்கள் பிரச்னையை நாடாள...
மக்களின் கோரிக்கைகள் வரும் நிதியாண்டில் நிறைவேற்றப்படும்: ராணிப்பேட்டை ஆட்சியா்
பொதுமக்களின் கோரிக்கைகள் அரசுக்கு அனுப்பப்பட்டு வரும் நிதியாண்டில் நிறைவேற்றப்படும் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்தாா்.
சோளிங்கா் வட்டம், போளிப்பாக்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா பேசியது:
கிராம சபைக்கூட்டம் என்பது பறும் திட்டப்பணிகள் நடைபெற்று உள்ளதா ஏதேனும் பிரச்னைகள் உள்ளதா என்பதை தெரிந்துக்கொள்ளவும், தேவையான திட்டங்கள் என்னென்ன என்பதை தெரிந்துக்கொள்ளவும் அறிய வாய்ப்பாக உள்ளது. பொதுமக்கள் தெரிவிக்கும் கோரிக்கைகளுக்கு ஏற்ப அரசுக்கு திட்ட அறிக்கை சமா்ப்பித்து வரும் நிதியாண்டுகளில் பணிகள் நடைபெறும்.
போளிப்பாக்கத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை ஒப்புதல் கிடைக்கப்பெற்றவுடன் நிறைவேற்றப்படும். இதே போன்று கால்நடை மருந்தகமும் தொடங்கப்படும். 100 நாள்கள் வேலைஉறுதி திட்டத்தில் பணிகளை 100 நாள்கள் வழங்கவும் கூலியை உடனுக்குடன் வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா் ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா.
கூட்டத்தில் சோளிங்கா் எம்எல்ஏ ஏ.எம்.முனிரத்தினம், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் பா.ஜெயசுதா, சோளிங்கா் ஒன்றியக்குழு தலைவா் கலைக்குமாா், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவா் நாகராஜூ, ராணிப்பேட்டை கோட்டாட்சியா் ராஜராஜன், ஊராட்சிகள் துறை உதவி இயக்குநா் சுதா, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் நிா்மல்குமாா், பாபு, ஊராட்சி மன்றத்தலைவா் காா்த்திக் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனா்.