மக்களின் நம்பிக்கை சின்னமாக தாமரை உள்ளது: அமித் ஷா
புதுதில்லி: பாரதிய ஜனதா கட்சியின் நிறுவன நாளில் கட்சியினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாட்டு மக்களின் இதங்களில் நம்பிக்கை மற்றும் நம்பிக்கையின் சக்திவாய்ந்த சின்னமாக தாமரை சின்னம் உருவெடுத்துள்ளதாக அவர் கூறினார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:
“பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான ஆட்சியில், இன்று நாட்டு மக்களின் இதங்களில் தாமரை நம்பிக்கை மற்றும் நம்பிக்கையின் புதிய சின்னமாக விளங்குகிறது. கடந்த பத்தாண்டுகளில் பாஜக செய்துவந்த சேவை, பாதுகாப்பு மற்றும் கலாசார விழிப்புணர்வு பணிகள் வரும் நாள்களில் மைல்கற்களாக மாறும்” என்று கூறினார்.
“கோடிக்கணக்கான பாஜக தொண்டர்கள், கட்சியில் கருத்தியல் உறுதிப்பாட்டை உறுதியாகக் கடைப்பிடித்து, தேசத்தைக் கட்டியெழுப்புவதில் தொடர்ந்து பங்களிப்பார்கள்” என்று மேலும் கூறினார்.
370 ஆவது சட்டப்பிரிவை ரத்து மற்றும் அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் இயக்கம் உள்ளிட்ட கட்சியின் முக்கிய சாதனைகளை நினைவு கூர்ந்த அமித் ஷா, நமது கட்சி ஏழை எளிய மக்கள், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பெண்களின் நலனை எப்போதும் உறுதி செய்துள்ளது என்றார்.
பத்திரிகையாளர் மன்றத்துக்கு ரூ.2.50 கோடி ஒதுக்கீடு: துணை முதல்வர் உதயநிதி
கடந்த 40 ஆண்டுகளில் ஒரு அரசியல் கட்சி எப்படி இயங்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக பாஜக விளங்குகிறது. மக்களை மதிக்கவும், நாட்டில் உள்ள எழை எளிய மக்களுக்க தேவையான வீடு, உணவு, சுகாதாரம், காப்பீடு போன்றவற்றை வழங்கியுள்ளது. மேலும் விவசாயிகளின் நலன்களை மேம்படுத்தவும் உறுதிபூண்டுள்ளது என்பதை பாஜக நிரூபித்துள்ளது என்று கூறினார்.
முன்னாள் மத்திய அமைச்சர் சியாமா பிரசாத் முகர்ஜியால் 1950 இல் ஜனசங்கம் நிறுவப்பட்டது. இதுவே பாஜக தொடக்கத்துக்கு அடிப்படை. 1977 இல் ஏமர்ஜென்சிக்கு பிறகு காங்கிரஸை எதிர்க்க ஜனசங்கம் ஜனதா கட்சியுடன் இணைந்தது. ஆர்எஸ்எஸ் அமைப்புடன் ஏற்பட்ட முரண்டுபாடுகள் காரணமாக ஜனதா கட்சியில் இருந்து வெளியேறியவர்கள் 1980 ஏப்ரல் 6 இல் பாரதிய ஜனதா கட்சியை நிறுவினர்.
அந்த கட்சியில் இருந்து அடல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் நரேந்திர மோடி என இதுவரை இரண்டு பிரதமர்கள் நாட்டுக்காக பணியாற்றியுள்ளனர்.
1996, 1998 மற்றும் 1999 மக்களவைத் தேர்தல்களில் அந்தக் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. 2014, 2019 மற்றும் 2024 மக்களவைத் தேர்தல்களில் வெற்றி பெற்று மத்தியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்தது அதன் வரலாற்றில் மிக உயர்ந்த இடமாகும்.