செய்திகள் :

மக்கள் கணிப்பு தான் வெற்றி பெறும்: டி.டி.வி. தினகரன்

post image

மக்கள் கணிப்பு தான் வெற்றி பெறும் என்று அமமுக பொதுச்செயலர் டிடிவி. தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மதுரை அவனியாபுரத்தில் சனிக்கிழமை அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஏற்கனவே இருக்கிறோம். திமுக என்கிற தீய சக்தி ஆட்சியில் நீடிக்கக் கூடாது. திமுகவுக்கு எதிராக மாற்று சக்திதான் தேசிய ஜனநாயகக் கூட்டணி. திமுக வெற்றி பெறக் கூடாது என நினைக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியுடன் எந்த கட்சியும் வரலாம்.

விஜய் அவருடைய ஆசையை சொல்லி இருக்கிறார். உண்மையான மாற்றாக மக்கள் மனதில் இருப்பது தேசிய ஜனநாயகக் கூட்டணிதான். சுயநலத்தால், பதவி வெறியால் திமுக மீது உள்ள பயத்தால், தங்கள் மீது வழக்கு வந்து விடக்கூடாது என்பதற்காக திமுக தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மறைமுகமாக சிலர் உதவி வருகிறார்கள்.

தோடர் மக்களுடன் நடனமாடி மகிழ்ந்த தில்லி துணைநிலை ஆளுநர்!

துரோகத்தின் முழு வடிவமாக இருக்கும் எடப்பாடி பழனிசாமி பேச்சுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. காங்கிரஸ் ஆட்சிக்காலத்தைவிட பாஜக ஆட்சிக்காலத்தில் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. மக்கள் நம்பிக்கையை அரசு இழந்துள்ளது. அதனை மறைப்பதற்காக திமுகவினர், மத்திய அரசின் மீது பழி போடுகிறார்கள்.

கருத்துக் கணிப்பு என்பதெல்லாம் பொய். மக்கள் கணிப்பு தான் வெற்றி பெறும். துரோகத்தைப் பற்றி எல்லாம் பேசுவதற்கு எடப்பாடி பழனிச்சாமி தகுதியற்றவர் என்றார்.

2026-ல் தமிழ்நாட்டின் முதல்வர் யார்? சி-வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பு!

உத்தரகோசமங்கை கோயில் குடமுழுக்கு தமிழில் நடைபெறும்: சேகர்பாபு

உத்திரகோசமங்கை கோயில் குடமுழுக்கு அன்னைத் தமிழில் நடைபெறும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.இன்று(ஏப். 2) சட்டப்பேரவையில் நடைபெற்ற கேள்வி நேரத்தில் ராமநாதபுரம் சட்டப்... மேலும் பார்க்க

நித்தியானந்தா இறந்துவிட்டாரா? கைலாசா விளக்கம்

தன்னைத் தானே கடவுள் என்று அறிவித்துக்கொண்டு, நாட்டில் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி, தலைமறைவாகி, கைலாசா என்ற தீவை வாங்கி அங்கு ஆசிரமம் நடத்தி வரும் நித்தியானந்தா இறந்துவிட்டதாக தகவல்கள் பரவி வரும... மேலும் பார்க்க

தேர்தல் நேரத்தில் திமுக நாடகம்: இபிஎஸ் குற்றச்சாட்டு

கச்சத்தீவு விவகாரத்தில் தேர்தல் நேரத்தில் திமுக நாடகமாடுவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.கச்சத்தீவை திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதல்வ... மேலும் பார்க்க

கச்சத்தீவு தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்!

கச்சத்தீவைத் திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கொண்டுவந்த தனித்தீர்மானம், சட்டப்பேரவையில் இன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.இந்தியாவுக்குச் சொந்தமாக இருந்த கச்சத்தீவு... மேலும் பார்க்க

கச்சத்தீவு: மு.க. ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இடையே காரசார வாதம்

கச்சத்தீவை திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தின் மீது தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார வாதம் நடைபெற்றது.இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்ட... மேலும் பார்க்க

கச்சத்தீவு தீர்மானத்துக்கு பாஜக ஆதரவு!

கச்சத்தீவை திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தனித்தீர்மானத்தை பாஜக ஆதரித்துள்ளது.இலங்கை கடற்படையால் மீனவர்களுக்கு ஏற்படும் இன்னல்களைப் போக்க... மேலும் பார்க்க