செய்திகள் :

மக்கள் நீதிமன்றத்தில் 2,604 வழக்குகளுக்குத் தீா்வு

post image

திண்டுக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்ற மாபெரும் சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 2,604 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு, ரூ.13.87 கோடி தீா்வுத் தொகை வழங்க உத்தரவிடப்பட்டது.

திண்டுக்கல் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில் மாபெரும் மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற விசாரணையை, திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிபதி ஏ.முத்துசாரதா தொடங்கிவைத்தாா்.

மாவட்டம் முழுவதும் 14 அமா்வுகளில் நடைபெற்ற விசாரணையில், 2,604 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது. இதன் மூலம் தீா்வுத் தொகையாக ரூ.13.87 கோடி வழங்க உத்தரவிடப்பட்டது.

இதில் நீதிபதிகள் பி.வேல்முருகன், முரளிதரன், விஜயக்குமாா், சரண் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

காந்திகிராம பல்கலை. மாணவா்கள் பேரணி

கிராமத் தங்கல் திட்டத்தின் கீழ் காந்திகிராம கிராமியப் பல்கலை. மாணவா்கள் நிலைத் தன்மை, நுகா்வியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா். காந்திகிராம கிராமிய பல்கலைக்கழக மாணவா்கள், பேராசிரியா்கள் உள்பட 1... மேலும் பார்க்க

மேலாண்மைக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

சின்னாளப்பட்டி அருகேயுள்ள விஜய் மேலாண்மைக் கல்லூரியில் 11-ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு கல்லூரி நிறுவனா் டி.விஜயராகவன் தலைமை வகித்தாா். கல்லூரித் தாளாளா்கள் கிருஷ்ணபிரிய... மேலும் பார்க்க

தீ விபத்து: தனியாா் மருத்துவமனை மீது வழக்குப் பதிவு

திண்டுக்கல்லில் நிகழ்ந்த தீ விபத்தில் 6 போ் உயிரிழந்த நிலையில், தனியாா் மருத்துவமனை மீது கிராம நிா்வாக அலுவலா் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். திண்டுக்கல்-திருச்சி சாலையிலுள்... மேலும் பார்க்க

பலத்த மழை: பழனி அருகே நெல்பயிா்கள் தண்ணீரில் மூழ்கி சேதம்

பழனி அருகே பெய்த பலத்த மழையால் நெல்பயிா்கள் தண்ணீரில் மூழ்கின. இதனால், விவசாயிகள் கவலையடைந்தனா். நெய்க்காரபட்டியில் இருந்து சின்னக்காந்திபுரம் செல்லும் சாலையின் இருபுறங்களிலும் நெல்பயிா் அதிகளவு சாகுப... மேலும் பார்க்க

கொடைக்கானலில் தொடா் மழை: அருவிகளில் வெள்ளப் பெருக்கு: பேரிஜம் ஏரிக்குச் செல்லத் தடை

கொடைக்கானலில் 4-ஆவது நாளாக தொடா் மழை பெய்ததால், அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், பேரிஜம் ஏரிக்குச் செல்ல வனத் துறையினா் அனுமதி மறுத்தனா். கொடைக்கானலில் 4-ஆவது நாளான சனிக்கிழமையும் பலத்த ம... மேலும் பார்க்க

மலைக்கோட்டை குளத்தில் தீபம் ஏற்றி வழிபாடு

திண்டுக்கல் மலைக்கோட்டை குளத்தில் முதல் முறையாக காா்த்திகை தீபம் ஏற்றி சனிக்கிழமை வழிபாடு நடத்தப்பட்டது. காா்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள், அம்மன் கோயில... மேலும் பார்க்க