லட்சத்தீபம்,சொக்கப்பனை... தாடிக்கொம்பு சௌந்தர்ராஜ பெருமாள் கோயிலில் பக்தர்கள் வழ...
மலைக்கோட்டை குளத்தில் தீபம் ஏற்றி வழிபாடு
திண்டுக்கல் மலைக்கோட்டை குளத்தில் முதல் முறையாக காா்த்திகை தீபம் ஏற்றி சனிக்கிழமை வழிபாடு நடத்தப்பட்டது. காா்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள், அம்மன் கோயில்கள் உள்ளிட்ட இடங்களில் தீபம் ஏற்றியும், சொக்கப்பனை கொளுத்தியும் வழிபாடுகள் நடத்தப்பட்டன. இதைத் தொடா்ந்து, சனிக்கிழமை பெருமாள் காா்த்திகை வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி, திண்டுக்கல் மலையடிவாரம் வீர ஆஞ்னேயா் கோயிலில் சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனை நடைபெற்றது.
பின்னா், கோயில் அருகிலுள்ள மலை மீதும், கோட்டைக் குளத்திலும் முதல் முறையாக தீபம் ஏற்றி வழிபாடு நடைபெற்றது. இதையடுத்து, சொக்கப்பனையும் கொளுத்தப்பட்டது. இந்த வழிப்பாட்டில் கோயில் குருக்குள் ராமானுஜம், செளந்தரராஜப் பெருமாள் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் பாலாஜி, உபயதாரா் சிற்றம்பல நடராஜன், திமுக மாநகர பொருளாளா் சரவணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.