சிவாஜி இல்லத்தின் உரிமையாளர் பிரபுதான்! ஜப்தி உத்தரவு ரத்து!
மணமேடையில் அதிர்ந்த மணமகன் - மணப்பெண் என காட்டப்பட்டவரின் தாயாரை திருமணம் செய்து வைக்க முயற்சியா?
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள பிரம்புரி என்ற இடத்தைச் சேர்ந்தவர் மொகமத் அசிம்(22). அசிம் பெற்றோர் இறந்துவிட்டனர். இதனால் தனது பூர்வீக வீட்டில் தனது சகோதரர் நதீமுடன் வசித்து வந்தார்.
இவருக்கு அவரின் சகோதரர் நதீமும், அண்ணி சாய்தாவும் சேர்ந்து திருமணத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். சாய்தா தனது உறவுக்காரப் பெண் மந்தன்ஷா(20) என்பவரை திருமணம் செய்து வைப்பதாகக் கூறி, அசிமை பெண் இருக்கும் பஷல்பூர் என்ற இடத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு மந்தன்ஷாவின் புகைப்படத்தை அசிமிடம் காட்டினர்.

அவரும் போட்டோவை பார்த்து திருமணத்திற்குச் சம்மதம் தெரிவித்தார். அங்குள்ள மசூதி ஒன்றில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
மெளலானா திருமணச் சடங்குகளைச் செய்து கொண்டிருந்தார். அப்போது மெளலானா மணப்பெண்ணின் பெயரைத் தஹிரா என்று வாசித்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அசிம் சந்தேகத்தில் மணப்பெண்ணின் முகத்தை மூடியிருந்த திரையை விலக்கி பார்த்தபோது மணமகள் மந்தன்ஷாவிற்குப் பதில் மந்தன்ஷாவின் தாயார் தஹிரா(45) மணமகளாக அமர்ந்திருந்தார். உடனே இதற்கு அசிம் எதிர்ப்பு தெரிவித்தார்.
ஆனால் மணமகளைத் திருமணம் செய்து அழைத்துச் செல்லவில்லையெனில் பாலியல் வன்கொடுமை புகார் கொடுப்போம் என்று அசிம் சகோதரரும், அண்ணியும் மற்ற குடும்ப உறுப்பினர்களும் மிரட்டியாத சொல்லப்படுகிறது.
அவர்கள் பிடியில் இருந்து தப்பித்து வந்த அசிம், இது குறித்து மீரட் போலீஸ் அதிகாரியைச் சந்தித்து மனு கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக மீரட் எஸ்.எஸ்.பி விபின், ``புகார் பெறப்பட்டுள்ளது. விசாரணை நடந்து, அதன் பின்னர் நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும்” என்றார். மகளைக் காட்டிவிட்டு தாயைத் திருமணம் செய்து வைக்க நடந்த முயற்சி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.