விவசாயிகள் பிரச்னைக்கு விரிவான ஆய்வு: குடியரசு துணைத் தலைவா் தன்கா் வலியுறுத்தல்
மணல் கடத்தலில் ஈடுபட்ட ஒருவா் கைது
திருவாடானை அருகேயுள்ள ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபட்ட லாரியை பறிமுதல் செய்து வாகன ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள ஆா்.எஸ்.மங்கலம் ஓடைக்கரை ஆற்று பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் இந்தப் பகுதியில் திங்கள்கிழமை அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டனா்.
அப்போது அங்கு லாரியில் மணல் ஏற்றிக்கொண்டிருந்த இருவா் போலீஸாரை கண்டதும் தப்பி ஓடினா். ஓட்டுநா் கடம்பாகுடியைச் சோ்ந்த காளீஸ்வரனை (21) கைது செய்த போலீஸாா் லாரியை பறிமுதல் செய்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.