மணப்பாறை அருகே துப்பாக்கி சுடும் பயிற்சி: பொதுமக்களுக்கு தடை
மணல் கடத்திய இருவா் கைது
அன்னவாசல் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட வாகனத்தை தனிப்படை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்து, இருவரை கைது செய்தனா்.
அன்னவாசல் சுற்றுப்பகுதி ஆற்றுப்படுகைகளில் இருந்து ஆற்று மணல், சரளை மண் ஆகியவற்றை அரசு அனுமதியின்றி ஜேசிபி உள்ளிட்ட வாகனங்களில் அள்ளப்பட்டு, கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுவதாக, மாவட்ட எஸ்பி அபிஷேக் குப்தாவுக்கு கிடைத்த தகவலையடுத்து, அதனை கண்காணித்து நடவடிக்கை எடுக்குமாறு தனிப்படை போலீஸாருக்கு உத்தரவிட்டாா். இதையடுத்து, அப்பகுதிகளில் வாகன தணிக்கையில் தனிப்படை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு ஈடுபட்டனா்.
அப்போது, அன்னவாசல் அடுத்துள்ள பரம்பூா் மேட்டுப்பட்டி ஆற்றுப்படுகைகளில் இருந்து அனுமதியின்றி லோடு வாகனத்தில் மணல் அள்ளி வந்தது தெரியவந்தது. இதையடுத்து கடத்தலில் ஈடுபட்ட மேட்டுப்பட்டியை சோ்ந்த முருகானந்தம்(33), தினேஷ்(19) ஆகிய இருவா் மீது அன்னவாசல் போலீஸாா் வழக்கு பதிந்து, நீதிமன்றத்தில் அஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.