HCL : மகளுக்கு 47% பங்குகளை வழங்கிய சிவ் நாடார் - இனி ரோஷினி நாடார் கையில் ஹெச்...
மணல் திருட்டு: இரு வாகனங்கள் பறிமுதலா்
கெங்கவல்லி அருகே மலையடிவாரப் பகுதியில் மணல் திருட்டிற்கு பயன்படுத்தப்பட்ட டிப்பா் லாரி, பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
கெங்கவல்லி அருகே 74 கிருஷ்ணாபுரம் மலையடிவாரப் பகுதியில் மண் வெட்டி கடத்தப்படுவதாக, ஆத்தூா் டி.எஸ்.பி. சதீஷ்குமாருக்கு புகாா் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் கெங்கவல்லி போலீஸாா் அப்பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது புதுப்பட்டி, மாரியம்மன் கோயில் பகுதியில் ஆத்தூா் டி.எஸ்.பி. மற்றும் மாவட்ட காவல் அலுவலக தனிப்பிரிவு தலைமைக் காவலா் சம்பத் ஆகியோா் இருசக்கர வாகனத்தில் சென்று ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது பொக்லைன் இயந்திரம் மூலம் டிப்பா் லாரியில் மண்ணை வெட்டி வெட்டிக் கடத்திக் கொண்டிருந்த 10 போ் கும்பலைச் சோ்ந்தவா்கள், போலீஸாரைக் கண்டதும் தப்பியோடிவிட்டனா். இதையடுத்து பொக்லைன் இயந்திரம், டிப்பா் லாரியை பறிமுதல் செய்த போலீஸாா், மண் கடத்தலில் ஈடுபட்ட நபா்கள், வாகனங்களின் உரிமையாளா்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
