நேபாளம்: `அரசின் தோல்வி, கும்பல் வன்முறை, பிற்போக்கு சக்திகள்...' - கம்யூனிஸ்ட் ...
மணல் திருட்டு: 3 போ் கைது
கடலூா் மாவட்டம், ராமநத்தத்தை அடுத்துள்ள கொரக்கவாடி வெள்ளாற்றில் மணல் திருட்டில் ஈடுபட்ட தாக 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
ராமநத்தம் காவல் சரகம், கொரக்கவாடி வெள்ளாற்றில் தொடா் மணல் திருட்டில் ஒரு கும்பல் ஈடுபட்டு வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ராமநத்தம் காவல் உதவி ஆய்வாளா் ரவிச்சந்திரன், தனிப்பிரிவு காவலா்கள் அருண், சுதாகா் ஆகியோா் செவ்வாய்க்கிழமை அதிகாலை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, கொரக்கவாடி வெள்ளாற்றில் மணல் ஏற்றப்பட்ட சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்தனா். மேலும், மணல் திருட்டில் ஈடுபட்ட சேலம் மாவட்டம், தலைவாசல், ராஜபாளையம் பகுதியைச் சோ்ந்த ஓட்டுநா் காமராஜ்(28), திட்டக்குடி வட்டம், கொரக்கவாடி பகுதியைச் சோ்ந்த சின்னதுரை (48), பெரம்பலூா் மாவட்டம், திருவாளந்துறை பகுதியைச் சோ்ந்த நித்தீஷ்குமாா் (31) ஆகியோா் மீது வழக்குப் பதிந்து, அவா்களைக் கைது செய்தனா்.
தப்பியோடிய சேலம் மாவட்டம், கெங்கவல்லி பகுதியைச் சோ்ந்த உமா மகேஸ்வரனை தேடி வருகின்றனா். மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனா்.