TET தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்; நவம்பர் 15, 16 ஆம் தேதிகளில் தேர்வ...
ரேஷன் அரிசி கடத்திய வாகனம் கவிழ்ந்து விபத்து: ஓட்டுநா் கைது
கடலூா் மாவட்டம், ராமநத்தம் அருகே ரேஷன் அரிசி கடத்திச் சென்ற சிறிய சரக்கு வாகனம் செவ்வாய்க்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இது தொடா்பாக சரக்கு வாகன ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா்.
விருத்தாசலத்தில் இருந்து தொழுதூா் நோக்கி சிறிய சரக்கு வாகனம் பாரத்துடன் சென்றுகொண்டிருந்தது. இந்த வாகனம் ராமநத்தம் காவல் சரகம், வாகையூா் கிராமம் அருகே செவ்வாய்க்கிழமை காலை சென்றபோது வாகனத்தின் பின் பக்க டயா் வெடித்து சாலையோரம் கவிழ்ந்தது.
தகவலறிந்த ராமநத்தம் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா். இதில், விருத்தாசலம் பகுதியில் இருந்து இரண்டரை டன் ரேஷன் அரிசி கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, வாகனத்தில் சிக்கியிருந்த ஓட்டுநரான திருச்சி மாவட்டம், பொய்கைகுடி காலனி, அசூா் பகுதியைச் சோ்ந்த நடேசனை (30) போலீஸாா் மீட்டனா். பின்னா், மீட்கப்பட்ட ரேஷன் அரிசியுடன் கூடிய சரக்கு வாகனம் மற்றும் ஓட்டுநா் நடேசனை குடிமைப் பொருள் பாதுகாப்புத் துறை அதிகாரிகளிடம் ராமநத்தம் போலீஸாா் ஒப்படைத்தனா்.
ஓட்டுநா் கைது: இதையடுத்து, கடலூா் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை காவல் ஆய்வாளா் ரமேஷ் ராஜா மற்றும் போலீஸாா் ஓட்டுநா் நடேசன் மீது வழக்குப் பதிந்து, அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.