மணிப்பூரில் இரண்டு தீவிரவாதிகள் கைது
மணிப்பூரின் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட அமைப்பான காங்லீபாக் கம்யூனிஸ்ட் கட்சி (நோயோன்)இன் இரண்டு தீவிர உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஷகோல்ஷெம் லெம்பா மைதேயி மற்றும் ஷாகோல்ஷெம் ரோமன் மைதேயி ஆகியோர் தங்கள் கட்சிக்கு நிதி திரட்டுவதற்காக பணம் வசூலிப்பில் ஈடுபட்டதாக மூத்த அதிகாரி ஒருவர் திங்கள்கிழமை தெரிவித்தார்.
இருவரும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.
இதனிடையே சனிக்கிழமை தெங்னௌபால் மாவட்டத்தில் உள்ள டி மினோ பகுதியில் இருந்து ஆறு ஐஇடிகளை பாதுகாப்புப் படையினர் மீட்டனர்.
மும்பை இந்தியன்ஸ் வரலாற்றுச் சாதனை!
மேலும் இந்த வெடிபொருட்களை அதே நாளில் வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் குழு செயலிழக்கச் செய்தது.
மணிப்பூரில் 2023 ஆம் ஆண்டு இன வன்முறை வெடித்ததில் இருந்து மாநிலம் முழுவதும் பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.