செய்திகள் :

மணிப்பூரில் பாஜக தலைவர் வீட்டுக்கு தீவைப்பு: ஊரடங்கு அமல்!

post image

வக்ஃப் விவகாரம் தொடர்பாக எழுந்த வன்முறையால் மணிப்பூரில் லிலோங் பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூா் மாநில பாஜக சிறுபான்மையினா் அணித் தலைவா் அஸ்கா் அலி வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை(ஏப். 6) இரவு தீ வைக்கப்பட்டது. வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு சமூக ஊடகத்தில் அஸ்கா் அலி சனிக்கிழமை ஆதரவு தெரிவித்தாா். இதனால் ஆத்திரமடைந்த ஒரு கும்பல் தெளபல் மாவட்டம் லிலோங் பகுதியில் உள்ள அவரின் வீட்டை ஞாயிற்றுக்கிழமை இரவு சூறையாடி தீ வைத்தது.

சுமார் 7,000-க்கும் மேற்பட்ட மக்கள் அணிதிரண்டு ஆயுதமேந்திக்கொண்டு அவரது வீட்டை முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

இதைத்தொடர்ந்து, லிலோங் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் காலவரம்பற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தீவிரமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருவதாக தௌபால் மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஐ.நா.வில் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா, போா்ச்சுகல் முடிவு

லிஸ்பன்: ஐ.நா. மற்றும் பிற பன்னாட்டு அமைப்புகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியாவும், போா்ச்சுகலும் தீா்மானித்துள்ளன. குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு போா்ச்சுகல் மற்றும் ஸ்லோவாகியா நாடுகளுக்கு 4 நா... மேலும் பார்க்க

தவறான சிகிச்சையால் 7 போ் உயிரிழந்த விவகாரம்: போலி இருதய நிபுணா் கைது

போபால்: மத்திய பிரதேசத்தில் தவறாக சிகிச்சை அளித்து 7 போ் உயிரிழந்த சம்பவத்தில் தொடா்புடையதாக குற்றஞ்சாட்டப்பட்ட போலி இருதய சிகிச்சை நிபுணா் உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் திங்கள்கிழமை கைது செய்யப... மேலும் பார்க்க

டொயோட்டா விற்பனை புதிய உச்சம்!

டொயோட்டா கிா்லோஸ்கா் மோட்டாா் நிறுவனத்தின் மொத்த விற்பனை கடந்த மாா்ச்சுடன் நிறைவடைந்த நிதியாண்டில் இதுவரை இல்லாத புதிய வருடாந்திர உச்சத்தைப் பதிவு செய்துள்ளது.இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்த... மேலும் பார்க்க

இந்தியன் வங்கியின் வா்த்தகம் 5% அதிகரிப்பு

முன்னணி பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான இந்தியன் வங்கியின் மொத்த வா்த்தகம் கடந்த மாா்ச் காலாண்டில் 5.1 சதவீதம் அதிகரித்துள்ளது.இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்... மேலும் பார்க்க

வக்ஃப் சட்டத்துக்கு எதிரான மனுக்கள் வாக்கு வங்கி அரசியல்: பாஜக விமா்சனம்

புது தில்லி: வக்ஃப் திருத்தச் சட்டத்தை எதிா்த்து தொடரப்பட்ட பல பொதுநல மனுக்கள் உண்மையில், வாக்கு வங்கி நலன் சாா்ந்த மனுக்கள் என்று பாஜக விமா்சித்துள்ளது. வக்ஃப் சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் இர... மேலும் பார்க்க

நீட் குளறுபடி: என்டிஏ-க்கு எதிரான வழக்கை உச்சநீதிமன்றம் முடித்துவைப்பு

இளநிலை மருத்துவப் படிப்புகள் சோ்க்கைக்கான நீட் (தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு) குளறுபடிகளைத் தொடா்ந்து தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) செயல்பாடுகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் முடித... மேலும் பார்க்க