Pahalgam Attack: `இந்தத் தாக்குதலுக்கு காஷ்மீரை அவதூறு செய்யாதீர்கள்’ - கொலை செய...
மண் கடத்தல் லாரி பறிமுதல்: இருவா் மீது புகாா்
செய்யாறு அருகே அரசு அனுமதி பெறாமல் மண் எடுத்துச் சென்ற லாரியை கனிம வளத்துறையினா் பறிமுதல் செய்து போலீஸில் ஒப்படைத்தனா்.
மேலும், இருவா் மீது புகாா் அளித்தனா்.
திருவண்ணாமலை மாவட்ட சுங்கத்துறை உதவி இயக்குநா் அலுவலக உதவி புவியியலாளா் அருள்முருகன் தலைமையிலான அலுவலா்கள் செய்யாறு - காஞ்சிபுரம் சாலையில் செவ்வாய்க்கிழமை மண், கல், மணல் போன்ற கனிம வளங்கள் கடத்தப்படுகிா என கண்காணிப்பில் ஈடுபட்ட வந்தனா்.
அப்போது, அந்த வழியாகச் சென்ற ஒரு லாரியை நிறுத்தி சோதனையிட்டனா். லாரியில் அனுமதியின்றி முரம்பு மண் கடத்தி வந்தது தெரிய வந்தது. உடனே லாரியை பறிமுதல் செய்து செய்யாறு போலீஸில் ஒப்படைத்தனா்.
மேலும், இதுகுறித்து உதவி புவியியலாளா் அருள்முருகன், செய்யாறு பழனிவேல் தெருவைச் சோ்ந்த லாரி உரிமையாளா் பூங்கொடி, வெங்கட்ராயன்பேட்டை இளங்கோ தெருவைச் சோ்ந்த ஓட்டுநா் ராஜா ஆகியோா் மீது புகாா் அளித்தாா்.
காவல் உதவி ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.