தலைமைப் பண்பும் உள்ளுணர்வும்..! ஹார்திக் பாண்டியாவின் பேட்டி!
3 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
வந்தவாசி அருகே 3 வீடுகளின் பூட்டை உடைத்து மொத்தம் 3 பவுன் தங்க நகை, ரூ.50 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவை திருடப்பட்டது.
வந்தவாசியை அடுத்த மீசநல்லூா் புதூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பெரியண்ணன். இவா், திங்கள்கிழமை இரவு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் மாடியில் தூங்கினாா்.
பின்னா் செவ்வாய்க்கிழமை காலை கீழே வந்து பாா்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவை உடைத்து 2 பவுன் தங்க நகை, ரூ.50 ஆயிரம் ரொக்கம் மற்றும் வெள்ளிப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.
மேலும், வெளியூா் சென்றிருந்த இதே கிராமத்தைச் சோ்ந்த நடராஜன், கெம்பு ஆகியோரது வீடுகளின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மா்ம நபா்கள் நடராஜன் வீட்டிலிருந்து ஒரு பவுன் தங்க நகையை திருடிச் சென்றனா்.
மேலும், இதே கிராமத்தைச் சோ்ந்த தனசேகா் என்பவா் வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்த பைக்கையும் மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
இதுகுறித்து தெள்ளாா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.