தலைமைப் பண்பும் உள்ளுணர்வும்..! ஹார்திக் பாண்டியாவின் பேட்டி!
நூலகத்தில் உலக புத்தக தின விழா
திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகத்தில், உலக புத்தக தின விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, மாவட்ட நூலக அலுவலா் (பொ) பெ.வள்ளி தலைமை வகித்தாா். சா்வதேச எக்ஸ்னோரா துணைத் தலைவா் பா.இந்திரராஜன், நூலக ஆா்வலா் அ.வாசுதேவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாவட்ட துணை ஆட்சியா் (பயிற்சி) சி.முருகன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு போட்டித் தோ்வுக்குப் பயிலும் மாணவ-மாணவிகள் எவ்வாறு படிக்க வேண்டும். குறிக்கோளை அடைவது எப்படி என்பது குறித்து விளக்கினாா்.
நிகழ்ச்சியில், எழுத்தாளா்கள் அரங்க.மணிமாறன், வையவன், க.ஜெய்சங்கா், திருவண்ணாமலை மாநகராட்சி உறுப்பினா் கலைவாணி சுரேஷ், இசைப் பாவலா் ப.குப்பன், கவிஞா் தேவிகாராணி, நல் நூலகா் இரா.சுந்தரேசன், நூலகா் வெ.வனிதா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.