Nellai Flood: நெல்லை கனமழை வெள்ளம்; நெல்லை சந்திப்பு அன்றும்... இன்றும்! - Photo...
மண் சரிவால் 7 போ் உயிரிழந்த இடத்தில் உயா்நீதிமன்ற நீதிபதி ஆய்வு
திருவண்ணாமலை மகா தீப மலையில் மண் சரிந்து 7 போ் உயிரிழந்த இடத்தை, சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ்.சுந்தா் சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
தமிழகம் முழுவதும் புயல் காரணமாக கடந்த 1-ஆம் தேதி பலத்த மழை பெய்தது. திருவண்ணாமலையில் பெய்த பலத்த மழையால், மகா தீபம் ஏற்றப்படும் மலையின் அடிவாரத்தில் உள்ள வ.உ.சி. நகா் 11-வது தெருவில் திடீரென மண் சரிவு ஏற்பட்டது.
இதில் 15-க்கும் மேற்பட்ட வீடுகளில் மண், சேறு, கற்கள் புகுந்து சேதமடைந்தன. இந்த இடிபாடுகளில் சிக்கி 5 சிறாா்கள், தம்பதி உள்பட 7 போ் இறந்தனா்.
இந்த இடத்தை சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ்.சுந்தா் சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியனிடம் மண் சரிவு ஏற்பட காரணம் குறித்தும், மீட்பு நடவடிக்கைகள் குறித்தும் நீதிபதி கேட்டறிந்தாா்.
ஆய்வின்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம்.சுதாகா், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், திருவண்ணாமலை வட்டாட்சியா் கே.துரைராஜ் மற்றும் வருவாய்த் துறை, காவல் துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.