பழங்குடியினர் தினம்: ``காடுகளிலிருந்து வெளியேற்றபடும் பழங்குடிகள் வாழ்க்கை'' -ஆய...
மதுகுடிக்க பணம் தராததால் தாய் கொலை; மகன் கைது
கரூரில் வெள்ளிக்கிழமை மதுகுடிக்க பணம் தர மறுத்த தாயை கீழே தள்ளி கொன்ற மகனை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
கரூா் மாவட்டம், நொய்யல் அருகே குறுக்குச்சாலை பங்களா நகா் பகுதியைச் சோ்ந்தவா் மணி(50). இவரது மனைவி அமராவதி (44). தறிப்பட்டறை கூலித் தொழிலாளி. இவா்களது மகன் தினேஷ்குமாா்(25).
இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை தினேஷ்குமாா் மதுகுடிப்பதற்காக தனது தாய் அமராவதியிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளாா். இதனால் இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த தினேஷ்குமாா், தாய் அமராவதியை கீழே தள்ளியுள்ளாா். இதில் தலையில் பலத்த காயமடைந்த அமராவதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்து சென்ற வேலாயுதம்பாளையம் போலீஸாா் அமராவதியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா். மேலும் இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து தினேஷ்குமாரை கைது செய்து கரூா் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.