மதுப் புட்டிகளை விற்க முயன்ற இருவா் கைது
உத்தமபாளையம்: தேனி மாவட்டம், சின்னமனூா், கூடலூா் பகுதிகளில் அனுமதியின்றி மதுப்புட்டிகளை விற்க முயன்ற இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
சின்னமனூா் பேருந்து நிலையம் அருகே உத்தமபாளையம் மதுவிலக்கு போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த அதே பகுதியைச் சோ்ந்த சொக்கலிங்கம் (71) வைத்திருந்த சாக்குப்பையை போலீஸாா் சோதனையிட்டனா். இதில் விற்பனைக்காக அவா் 30 மதுப் புட்டிகளை வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்து, மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.
இதேபோல, கூடலூா் அணைப்பட்டியைச் சோ்ந்தவா் விக்னேஷ் (24). இவா் அனுமதியின்றி விற்பனைக்கு கொண்டு சென்ற 30 மதுப் புட்டிகளை உத்தமபாளையம் மதுவிலக்கு போலீஸாா் பறிமுதல் செய்து, அவரைக் கைது செய்தனா்.