செய்திகள் :

மதுராவில் சட்டவிரோத ஆயுத தொழிற்சாலை கண்டுபிடிப்பு

post image

மதுராவில் சட்டவிரோத ஆயுத தொழிற்சாலையை தில்லி போலீஸார் கண்டறிந்து ஒருவரை கைது செய்தனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள யமுனை நதிக்கு அருகே செயல்பட்டு வந்த சட்டவிரோத ஆயுத தொழிற்சாலையை தில்லி போலீஸார் சனிக்கிழமை கண்டுபிடித்தனர். யமுனை நதிக்கு அருகில் 3 முதல் 8 அடி ஆழம் வரை தண்ணீர் தேங்கிய வயல்களைக் கடந்து சென்று இந்த தொழிற்சாலையை அவர்கள் கண்டறிந்துள்னர்.

சம்பவ இடத்தை அடைய குழுவிற்கு கிட்டத்தட்ட இரண்டு மணி நேரமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மதுராவைச் சேர்ந்த ஷிவ் சரண் (60) கைது செய்யப்பட்டார். அவர், தண்ணீர் தேங்கிய வயல்களைப் பயன்படுத்தி தப்பிக்க முயன்றபோது கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

ஜம்முவில் எல்லை அருகே ட்ரோன் மீட்பு

விசாரணையில், ​​சில நாட்களுக்கு முன்பு அலிகாரில் இதேபோன்ற சோதனையில் கைது செய்யப்பட்ட தனது கூட்டாளி ஹன்வீருக்கு உதவியதாக சரண் தெரிவித்தார். மேலும் அங்கிருந்து ஆயுதங்களும் மீட்கப்பட்டன. முன்னதாக அலிகாரிலும் சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் மூலப்பொருட்களின் குவியல் அண்மையில் மீட்கப்பட்டது.

The Delhi Police has busted an illegal arms factory near the Yamuna river in Uttar Pradesh's Mathura by crossing nearly three kilometres of waterlogged fields where the depth of water ranged from 3 to 8 feet, an official said on Saturday.

பசுவை விலங்காகக்கூட கருதுவதில்லை! தெருநாய் விவகாரத்தில் பிரதமர் மோடியால் சிரிப்பலை!

பெரும்பாலான விலங்கு ஆர்வலர்கள் பசுவை விலங்காகக் கருதவில்லை என்ற பிரதமர் மோடியின் கருத்து கவனம் பெற்றுள்ளது.தில்லியில் விக்யாக் பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.சில விலங்கு ஆர... மேலும் பார்க்க

நாள்கணக்கில் உலகப் பயணம்; மணிப்பூரில் 5 மணி நேரம்தான்! -காங். விமர்சனம்

மணிப்பூரில் 5 மணி நேரத்துக்கும் குறைவாக பிரதமர் நரேந்திர மோடி செலவிட்டுள்ளதாகக் குறிப்பிட்டு எதிர்க்கட்சியான காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது. கடந்த 2023-இல் தொடங்கிய இன மோதல்களுக்குப் பின் சுமார் ... மேலும் பார்க்க

ஜார்க்கண்ட்: ரூ.12.72 லட்சம் வெளிநாட்டு மதுபானங்கள் பறிமுதல்!

மேதினிநகர்: ஜார்கண்ட் மாநிலம் பலாமு மாவட்டத்தில், லாரியில் ரூ.12.72 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு மதுபானங்களை கடத்த முயன்ற போது அதை பறிமுதல் செய்ததாக போலீஸார் தெரிவித்தனர்.நேற்று முன்தினம் (செப்டம்பர... மேலும் பார்க்க

மணிப்பூர் மக்களுக்கு மத்திய அரசு ஆதரவு! பிரதமர் மோடி உறுதி!

மணிப்பூர் மக்களுக்கு மத்திய அரசின் ஆதரவு இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.மணிப்பூரில் வெடித்த இன மோதலைத் தொடர்ந்து, பெரும் இடைவெளிக்குப்பின் இன்று (செப். 13) அங்கு சென்றுள்ள பிரதமர் நரேந்த... மேலும் பார்க்க

யானை திருடு போய்விட்டது: ஜார்க்கண்டில் போலீஸில் புகார்

யானை திருடு போய்விட்டதாக உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் வழக்கு பதிவு செய்துள்ளார். உத்தரப் பிரதேசத்தின் மிர்சாபூரைச் சேர்ந்த நரேந்திர குமார் சுக்லா என்ற நபர் ஜார்க்கண்டின் காவல் நிலையத்தில் வெள்ள... மேலும் பார்க்க

மணிப்பூரில் அரைநாள் பயணம் முடிந்தது! அஸ்ஸாமில் பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி இன்று(செப். 13) மாலை அஸ்ஸாம் தலைநகர் குவாஹாட்டிக்குச் சென்றடைந்தார்.மணிப்பூா் பயணத்தை முடித்துக் கொண்டு அஸ்ஸாம் சென்றுள்ள பிரதமா் மோடி, ஞாயிற்றுக்கிழமை (செப்.14) வரை அங்கு பல்வேற... மேலும் பார்க்க