மதுரை மத்திய சிறையில் சிறப்பு மருத்துவ முகாம்
மதுரை மத்திய சிறையில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில் 200-க்கும் மேற்பட்ட சிறைவாசிகள் பங்கேற்று பயனடைந்தனா்.
சிறை வளாகத்தில் நடைபெற்ற இந்த மருத்துவ முகாமுக்கு, சிறைத் துறை மதுரை சரக துணைத் தலைவா் முருகேசன் தலைமை வகித்தாா். மதுரை மத்திய சிறைக் கண்காணிப்பாளா் சதீஷ்குமாா் முன்னிலை வகித்தாா். மருத்துவ முகாமை ரோட்டரி மாவட்ட ஆளுநா் ராஜா கோவிந்தசாமி சிறப்புரையாற்றி தொடங்கி வைத்தாா். முகாமில் 6 மருத்துவா்கள், 16 மருத்துவப் பணியாளா்கள் பங்கேற்றனா். இதில் பொது மருத்துவம், எலும்பு முறிவு, தோல், கண் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த முகாமில் 200-க்கும் மேற்பட்ட சிறைவாசிகள், சிறை ஊழியா்கள் பங்கேற்று பயனடைந்தனா். இதைத் தொடா்ந்து சிறைவாசிகளுக்கு புத்தகங்களும், கிருஷ்ணா கண் பாதுகாப்பகம் சாா்பில் கண் கண்ணாடிகளும் வழங்கப்பட்டன.