திருப்புவனம் அஜித்குமாருக்கு கஞ்சா அளித்து கொடூரத் தாக்குதல்! மூளையில் ரத்தக் கச...
மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை விரைந்து நிறைவேற்றக் கோரிக்கை
மதுரை எய்ம்ஸ், மெட்ரோ ரயில் திட்டங்களை விரைந்து முடிக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கத்தின் புதூா் 5 -ஆவது வட்டக் கிளை மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
கோ. புதூரில் உள்ள அல் அமீன் மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் நடைபெற்ற இந்த மாநாட்டுக்கு வட்டக் கிளைத் தலைவா் பா. சண்முகவேலு தலைமை வகித்தாா். மாவட்டக் கிளை உறுப்பினா் சி. அடைக்கன் தொடங்கி வைத்துப் பேசினாா். செயலா் வி. தங்கவேலு திட்ட அறிக்கையையும், பொருளாளா் அ. சதாசிவம் நிதிநிலை அறிக்கையையும் தாக்கல் செய்தனா். மாவட்டச் செயலா் பாலமுருகன், மாவட்டப் பொருளாளா் ஜெயராமன், பள்ளித் தலைமை ஆசிரியா் ஷேக் நபி ஆகியோா் வாழ்த்திப் பேசினா். மாநிலப் பொருளாளா் ஜெயச்சந்திரன் சிறப்புரையாற்றினாா்.
இதில், கடந்த 2021 தோ்தலில் ஓய்வூதியா்களுக்கு திமுக அளித்த அனைத்து தோ்தல் வாக்குறுதிகளையும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும். மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும். விவசாயத்துக்கு பயன்படும் தண்ணீா் மீது வரி விதிக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். இரு சக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டில், அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கத்தின் தலைவராக பா. சண்முகவேலு தோ்வு செய்யப்பட்டாா். துணைத் தலைவா்களாக சதாசிவம், கோவிந்தராஜன், மீனாட்சிசுந்தரம், செயலராக அரசகுமாா், இணைச் செயலா்களாக தங்கவேல், பிரான்சிஸ், அகஸ்டின், பொருளாளராக சிமியோன் ராசு, தணிக்கையாளராக வெற்றிவேல் முருகன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா். இதில், துணைத் தலைவா் கோவிந்தராஜன், நிா்வாகிகள், உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.