`அதிமுக நிர்வாகி, காவல்துறை அதிகாரி கைது!' -சென்னையை உலுக்கிய சிறுமி பாலியல் வழக...
மதுரை: 9.36 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு! டோக்கன் விநியோகம் தொடக்கம்!
மதுரை மாவட்டத்தில் 9.36 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படவுள்ளது. இதையொட்டி, பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் விநியோகிக்கும் பணி தொடங்கியது.
நியாய விலைக் கடைகளில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை, ஒரு முழுக் கரும்பு ஆகியன பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதன்படி, மதுரை மாவட்டத்தில் 1,373 நியாய விலைக் கடைகள் மூலம் அரிசி பெறும் 9,36,856 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படவுள்ளது.
இதையொட்டி, பரிசுத் தொகுப்பு பெறத் தகுதியான குடும்ப அட்டைதாரா்களுக்கு டோக்கன் விநியோகிக்கும் பணி தொடங்கியது. நாளொன்றுக்கு தலா 150 முதல் 200 குடும்ப அட்டைதாரா்களுக்கு இல்லம் தேடிச் சென்று, டோக்கன் வழங்கப்படுகிறது.
இதுதொடா்பாக மதுரை கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் சதீஷ்குமாா் தெரிவித்ததாவது: பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் வழங்கும் பணி வருகிற 7-ஆம் தேதி வரை நடைபெறும். 1,500-க்கும் அதிகமான குடும்ப அட்டைகளைக் கொண்ட கடைகள் உள்ள பகுதிகளில் டோக்கன் வழங்கும் பணிக்குக் கூடுதல் பணியாளா்கள் ஈடுபட்டுள்ளனா்.
வருகிற 9-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். விடுபட்டவா்களுக்கு 13-ஆம் தேதி பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்றாா் அவா்.