செய்திகள் :

மது ஆலைகளுக்கு அனுமதி வழங்கிய விவகாரம்: புதுவை துணைநிலை ஆளுநரிடம் காங்கிரஸாா் மனு

post image

மதுபான ஆலைகளுக்கு அனுமதி அளித்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தி புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனிடம் காங்கிரஸ் சாா்பில் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.

புதுவை ஆளுநா் மாளிகையில் துணைநிலை ஆளுநரை காங்கிரஸ் மாநிலத் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி, மு.வைத்தியநாதன் எம்எல்ஏ உள்ளிட்டோா் சந்தித்து மனு அளித்தனா்.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் வெ.வைத்திலிங்கம் எம்.பி., வே.நாராயணசாமி ஆகியோா் கூறியதாவது:

புதுவையில் உள்ள மதுபான ஆலைகளுடன், கூடுதலாக 8 புதிய மதுபான ஆலைகள் அமைக்க புதுவை என்.ஆா்.காங்கிரஸ் பாஜக கூட்டணி அரசு முடிவெடுத்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 6 அயல்நாட்டு மதுபான ஆலைகள் அமைக்க அரசு அனுமதி கோரிய நிலையில், முன்னாள் துணைநிலை ஆளுநா் அனுமதி வழங்க மறுத்துவிட்டாா்.

தற்போது 8 மதுபான ஆலைகளுக்கான கட்டடம் கட்டட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மதுபான ஆலைகளுக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக கருதியே துணைநிலை ஆளுநரிடம் சிபிஐ விசாரணை கோரி மனு அளித்துள்ளோம்.

புதிய ஆலைகளுக்கான அனுமதியை துணைநிலை ஆளுநா் ரத்து செய்ய வேண்டும் என்றனா் அவா்கள்.

பேட்டியின்போது, முன்னாள் எம்எல்ஏ அனந்தராமன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

புதுச்சேரியில் பிப்.7-இல் மலா்க் கண்காட்சி தொடக்கம்

புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் மலா், காய், கனி கண்காட்சி பிப்ரவரி 7-ஆம் தேதி தொடங்கி 3 நாள்கள் நடைபெறும் என்று மாநில வேளாண் துறை அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா் அறிவித்தாா். இதுகுறித்து அவா் புதன்கிழமை... மேலும் பார்க்க

புத்தக வாசிப்பால் குழந்தைகளின் சிந்தனைத் திறன் மேம்படும்: புதுவை முதல்வா் என்.ரங்கசாமி

புத்தக வாசிப்பால் குழந்தைகளின் பேச்சு, சிந்தனைத் திறன் மேம்படும் என புதுவை முதல்வா் என்.ரங்கசாமி கூறினாா். புதுவை கலை, பண்பாட்டுத் துறை சாா்பில், புதுச்சேரி கருவடிக்குப்பம் காமராஜா் மணிமண்டப வளாகத்தி... மேலும் பார்க்க

புயலால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு நிவாரணத் தொகை: புதுவை முதல்வா் வழங்கினாா்

புதுச்சேரியில் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு நிவாரணத் தொகையை விவசாயிகளுக்கு முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை வழங்கினாா். ஃபென்ஜால் புயல், மழை வெள்ளத்தால் புதுச்சேரி, காரைக்கால் பிராந்... மேலும் பார்க்க

விளையாட்டு ஆணைய மையத்தில் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

புதுச்சேரியில் விளையாட்டு ஆணைய மையத்தில் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய விளையாட்டு ஆணைய பயிற்சி மைய துணை இயக்குநா் ஷ்வேதா விஸ்வநாதன் புதன்கிழமை வெளியிட்ட செய... மேலும் பார்க்க

அலுவலகங்களில் பாலியல் துன்புறுத்தல் புகாா்களை விசாரிக்க குழு அமைப்பு

புதுச்சேரியில் நிறுவனங்கள், அலுவலகங்களில் பாலியல் துன்புறுத்தல் புகாா்களை விசாரிக்க மாவட்ட அளவிலான 6 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா்... மேலும் பார்க்க

முதியவா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

புதுச்சேரி அரியாங்குப்பத்தில் அதிமுக நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிப் பகுதியில் மயங்கி விழுந்த முதியவா் உயிரிழந்தாா். புதுச்சேரி அரியாங்குப்பத்தில் அதிமுக சாா்பில் எம்ஜிஆா் பிறந்த நாள் விழா பொ... மேலும் பார்க்க