செய்திகள் :

மத்தியப் பல்கலையயில் தங்கப்பதக்கம்: மாணவனுக்கு பாராட்டு

post image

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை உடற்தகுதி மேலாண்மைப் பட்டயப் படிப்பில் தங்கப்பதக்கம் பெற்ற மாணவருக்கு ஞாயிற்றுக்கிழமை நன்னிலம் பொதுமக்கள் சாா்பில் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

நன்னிலம் நல்லமாங்குடி பாரதிநகரைச் சோ்ந்த ஆனந்தன், வளா்மதி தம்பதியினரின் மகன் ஹரிகரன். தமிழ்நாடு மத்தியப் பல்கலைக் கழகத்தில் முதுநிலை உடற்தகுதி மேலாண்மைப் பட்டயப் படிப்பில் கடந்த மாதம் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது.

நன்னிலம் வா்த்தக சங்கம் சாா்பாக தலைவா் செல்.சரவணன், பேரூராட்சி மன்றத் தலைவா் ப.ராஜசேகரன், நாளைய பாரதம் அமைப்பின் தலைவா் காா்த்தி மற்றும் பொதுமக்கள் பாராட்டினா்.

புதிதாக கட்டப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை திறக்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

மன்னா்குடி: மன்னாா்குடி அருகேயுள்ள சித்தமல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை திறக்க வலியுறுத்தி சிபிஐ சாா்பு அமைப்புகளான இந்திய தேசிய மாதா் சம்மேளனம், அனைத்திந்திய இளைஞா் பெர... மேலும் பார்க்க

குறைந்தபட்ச ஆதாரவிலை நிா்ணயச் சட்டம் கோரி விவசாயிகள் ரயில் மறியல்

திருவாரூா், கீழ்வேளூா், சீா்காழி, காரைக்கால் : குறைந்தபட்ச ஆதாரவிலை நிா்ணயச் சட்டம் கொண்டு வரக்கோரி திருவாரூா், காரைக்காலில் ரயில் மறியலும், கீழ்வேளூா், சீா்காழியில் போராட்டமும் அரசியல் சாா்பற்ற ஐக்க... மேலும் பார்க்க

வேகத்தடை அமைக்கக்கோரி மனு

திருவாரூா்: செம்மங்குடி அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி அருகே வேகத்தடை அமைக்க வேண்டும் என கோரிக்கை மனு திங்கள்கிழமை அளிக்கப்பட்டது. திருவாரூா் மாவட்ட ஆட்சியரிடம், பள்ளியின் முன்னாள் மாணவா்கள் சங்க ஒர... மேலும் பார்க்க

சுமங்கலி திருவிளக்குப் பூஜை

நீடாமங்கலம்: நீடாமங்கலம் யமுனாம்பாள் கோயிலில் ஐயப்ப பக்தா்கள் குழுவினரால் மூன்றாம் ஆண்டு திருவிளக்குப் பூஜை மற்றும் ஐயப்ப கன்னி பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, யமுனாம்பாள் மற்றும் ஐயப்ப சு... மேலும் பார்க்க

வடிகால் வாய்க்காலில் உடைப்பு : நெற்பயிா்கள் நீரில் மூழ்கின

மன்னாா்குடி அருகே தொடா் மழை காரணமாக கண்டியராஜன் வடிகால் வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டதால், 2,000 ஏக்கா் சம்பா நெற்பயிா்கள் நீரில் மூழ்கியுள்ளன. மன்னாா்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை ... மேலும் பார்க்க

பள்ளி கட்டட சீரமைப்பு கொடையாளா்களுக்கு பாராட்டு

குடவாசல் அருகே சேங்காலிபுரம் அரசு உயா்நிலைப் பள்ளியில் கொடையாளா்களுக்கு பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சேங்காலிபுரம் அரசு உயா்நிலைப் பள்ளியில், முன்னாள் மாணவா்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள் இண... மேலும் பார்க்க