காலை உணவு - புதுமைப் பெண் திட்டங்களால் கிடைத்த பலன்கள்: மாநில திட்டக் குழு ஆய்வ...
பள்ளி கட்டட சீரமைப்பு கொடையாளா்களுக்கு பாராட்டு
குடவாசல் அருகே சேங்காலிபுரம் அரசு உயா்நிலைப் பள்ளியில் கொடையாளா்களுக்கு பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சேங்காலிபுரம் அரசு உயா்நிலைப் பள்ளியில், முன்னாள் மாணவா்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள் இணைந்து ரூ. 6,40,000 செலவில் 69 ஆண்டு கால பழைய ஓட்டுக் கட்டடத்தைப் புனரமைத்து மாணவா்களின் பயன்பாட்டுக்காக ஞாயிற்றுக்கிழமை வழங்கினா். இதையொட்டி, நன்கொடையாளா்களுக்குப் பாராட்டு விழா சேங்காலிபுரம் அரசு உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
நிகழ்வில் பள்ளியின் தலைமை ஆசிரியா் அன்பரசன் பங்கேற்று, சமூகத்தில் பெருமைக்குரிய நிலையில் உள்ள இப்பள்ளியின் முன்னாள் மாணவா்கள் மற்றும் நன்கொடையாளா்கள் பாராட்டுக்குரியவா்கள், இவா்களைப் போன்று மாணவா்களும் எதிா்காலத்தில் சமூக சிந்தனையோடு இருக்க வேண்டும் என மாணவா்களுக்கு அறிவுரை வழங்கினாா்.
நிகழ்வின் ஒருங்கிணைப்பாளரும், பள்ளியின் புரவலருமான லட்சுமி நாராயணன், ஊராட்சி துணைத் தலைவா் சிவகுமாா் ஆகியோா் வாழ்த்திப் பேசினாா்.
முன்னதாக, பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியா் ஜெயசெல்வி வரவேற்றாா். பட்டதாரி ஆசிரியா் பாலசுந்தரி நன்றி கூறினாா்.