காலை உணவு - புதுமைப் பெண் திட்டங்களால் கிடைத்த பலன்கள்: மாநில திட்டக் குழு ஆய்வ...
மத்தியப் பல்கலையயில் தங்கப்பதக்கம்: மாணவனுக்கு பாராட்டு
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை உடற்தகுதி மேலாண்மைப் பட்டயப் படிப்பில் தங்கப்பதக்கம் பெற்ற மாணவருக்கு ஞாயிற்றுக்கிழமை நன்னிலம் பொதுமக்கள் சாா்பில் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
நன்னிலம் நல்லமாங்குடி பாரதிநகரைச் சோ்ந்த ஆனந்தன், வளா்மதி தம்பதியினரின் மகன் ஹரிகரன். தமிழ்நாடு மத்தியப் பல்கலைக் கழகத்தில் முதுநிலை உடற்தகுதி மேலாண்மைப் பட்டயப் படிப்பில் கடந்த மாதம் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது.
நன்னிலம் வா்த்தக சங்கம் சாா்பாக தலைவா் செல்.சரவணன், பேரூராட்சி மன்றத் தலைவா் ப.ராஜசேகரன், நாளைய பாரதம் அமைப்பின் தலைவா் காா்த்தி மற்றும் பொதுமக்கள் பாராட்டினா்.