செய்திகள் :

மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!

post image

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தன்னாட்சி அமைப்பான அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி மையத்தின்(சிஎஸ்ஐஆர்) கீழ் செயல்பட்டு வரும் மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனத்தில் (சிஆர்ஆர்ஐ). இந்த நிறுவனம் நிரப்பப்பட உள்ள ஒரு முதன்மையான ஆராய்ச்சி ஆய்வகமாகும்.

விமான ஒடு பாதை, சாலைகளின் வடிவமைப்பு, கட்டுமானம், பராமரிப்பு மற்ரும் நடுத்தர,பெரு நகரங்களுக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்துத் திட்டங்கள், சமவெளி, மலைப்பகுதி போன்ற வெவ்வேறு நில சாலைகளின் மேலாண்மை. தரம் குன்றிய கட்டுமான பொருட்களின் மேம்பாடு பற்றி பல்வேறு ஆய்வுகளையும், ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டு வரும் இந்த நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 209 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஏப்ரல் 21 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிவிப்பு எண்.CRRI/02/PC/JS-JST/2025

பணி: Junior Secretariat Assistant (Gen/F&A/S&P)

காலியிடங்கள்: 177

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.19,900 - 63,200

வயது வரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Junior Stenographer

காலியிடங்கள்: 32

தகுதி : பிளஸ் 2 தேர்ச்சியுடன் சுருக்கெழுத்தில் நல்ல திறன் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.25,500 - 81,100

வயது வரம்பு: 27-க்குள் இருக்க வேண்டும்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் ஆராய்ச்சிப் பணிகள்

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ.500. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளி மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு வழங்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: https://crridom.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 21.4.2025

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ஓட்டுநா், நடத்துநா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி

அரசு போக்குவரத்துக் கழகங்களில் காலியாகவுள்ள 3,274 ஓட்டுநா், நடத்துநா் பணிகளுக்கு மார்ச் 21 முதல் விண்ணப்பிக்கலாம் என போக்குவரத்துத் துறை அறிவித்திருந்த நிலையில், திங்கள்கிழமை (ஏப். 21) கடைசி நாள் என ப... மேலும் பார்க்க

மிஸ்பண்ணிடாதீங்க... அங்கன்வாடி மையங்களில் 7,783 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழக அரசின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்களில் காலியாக 3,886 அங்கன்வாடி பணியாளா்கள், 305 குறு அங்கன்வாடி பணியாளா்கள் மற்றும் 3,592 அங்க... மேலும் பார்க்க

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: டிப்ளமோ, பிஇ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

ரைட்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள பொறியாளர் பணியிடங்களுக்கு பொறியியல் துறையில் பட்டயம், பட்டம் பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணி: Resident Engineerகாலியிடங்கள்: 21தகுதி: பொ... மேலும் பார்க்க

தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தில் உங்களுக்கான வேலைக்கு விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக் கழகத்தின்கீழ் செயல்படும் எம்டிசி சென்னை, எஸ்இடிசி, விழுப்புரம் மண்டல பணிமனைகளில் உள்ள பணிமனைகளில் உதவித்தொகையுடன் ஒரு ஆண்டு தொழிற்பழகுநர் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற... மேலும் பார்க்க

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ஐடிபிஐ வங்கியில் வேலை!

மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்திய அரசின் தொழில் வளர்ச்சி வங்கியான இந்தியத் தொழில் மேம்பாட்டு வங்கியான ஐடிபிஐ வங்கியில் நிரப்பப்பட உள்ள 119 சிறப்பு அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்... மேலும் பார்க்க

இடிசிஐஎல் நிறுவனத்தில் ஆலோசகர் வேலை

மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இந்தியாவிற்குள்ளும் வெளிநாட்டிலும் கல்வியின் அனைத்துத் துறைகளிலும் திட்ட மேலாண்மை, ஆலோசனை, கல்வி தொழில்நுட்பம் மற்றும் சேவைகளை வழங்கி வருவதுடன் தொடர்ந்து லாபம் ஈட்டும் ... மேலும் பார்க்க