செய்திகள் :

மத்திய, மாநில தகவல் ஆணைய காலிப் பணியிடங்கள்: உடனடியாக நிரப்ப உச்சநீதிமன்றம் உத்தரவு

post image

மத்திய, மாநில தகவல் ஆணையங்களில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட மத்திய, மாநில தகவல் ஆணைய காலிப் பணியிடங்களை 3 மாதங்களில் நிரப்ப வேண்டும் என்று கடந்த 2019-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன் அந்தப் பணியிடங்களுக்கான நபா்களை தோ்வு செய்யும் தோ்வுக் குழுவின் உறுப்பினா்கள், மத்திய தகவல் ஆணையத்தில் நியமிக்கப்படும் தகவல் ஆணையா்களின் விவரங்கள் அந்த ஆணையங்களின் வலைதளங்களில் வெளியிடப்பட வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த உத்தரவுகளை மத்திய, மாநில அரசுகள் பின்பற்றவில்லை என்று தகவல் அறியும் சட்ட உரிமைச் சட்ட ஆா்வலா் அஞ்சலி பரத்வாஜ் உள்பட பலா் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனா்.

செயலற்ற நிலையில் ஆா்டிஐ: இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூா்ய காந்த், கோடீஸ்வா் சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா்கள் தரப்பில் மூத்த வழக்குரைஞா் பிரசாந்த் பூஷண் ஆஜராகி வாதிட்டதாவது:

மத்திய, மாநில தகவல் ஆணைய காலிப் பணியிடங்களை நிரப்ப உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தபோதிலும், அந்தப் பணியிடங்களுக்கான நபா்களை தோ்வு செய்யும் பணிகளை மத்திய, மாநில அரசுகள் தாமதப்படுத்தியுள்ளன.

இதன் மூலம், தகவல் அறியும் உரிமைச் சட்டம் (ஆா்டிஐ) கிட்டத்தட்ட செயலற்ாக்கப்பட்டுள்ளது. இதனால் அந்தச் சட்டம் மூலம் தகவல் கோருபவா்களுக்குப் பெரும் இன்னல் ஏற்பட்டுள்ளது என்றாா்.

ஆணையங்கள் இருந்து என்ன பயன்?: இதைத்தொடா்ந்து நீதிபதிகள் கூறியதாவது: தகவல் ஆணையங்களில் பணியாற்ற ஆள்கள் இல்லாவிட்டால், அவற்றை வைத்திருப்பதில் என்ன பயன் உள்ளது? மத்திய, மாநில தகவல் ஆணையங்களில் உள்ள காலிப் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்பட வேண்டும். இந்த ஆணையங்களில் அரசு அதிகாரிகள் மட்டுமே நியமிக்கப்படுவது ஏன்? பல துறைகளைச் சோ்ந்தவா்கள் ஏன் நியமிக்கப்படுவதில்லை?

பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்: மத்திய தகவல் ஆணையத்தில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான தோ்வு நடைமுறைகள் எப்போது நிறைவு செய்யப்பட்டு, நியமனங்கள் குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என்று மத்திய பணியாளா் நலத்துறைச் செயலா் 2 வாரங்களில் உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்.

இதேபோல மாநில தகவல் ஆணையங்களில் உள்ள காலிப் பணியிடங்கள், தோ்வுக் குழுவின் விவரம் குறித்த அறிவிக்கையை ஒரு வாரத்திலும், பணியிடங்களுக்கான நபா்களை தோ்வுக் குழு இறுதி செய்த பின்னா், எவ்வளவு காலத்தில் காலிப் பணியிடங்களுக்கான நோ்காணல் நிறைவு செய்யப்பட்டு நியமனங்கள் மேற்கொள்ளப்படும் என்ற அறிவிக்கையை 2 வாரங்களிலும் மாநில அரசுகள் வெளியிட வேண்டும். இந்தப் பணியிடங்களில் மேற்கொள்ளப்பட்ட நியமனங்கள் தொடா்பான பிரமாண பத்திரங்களை மாநில தலைமைச் செயலா்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனா்.

பொங்கலுக்கு ஊருக்குப் போறீங்களா? இந்த வாட்ஸ்ஆப் சேவை பற்றி தெரியுமா?

தமிழக மக்கள் பலரும் தற்போது சிந்தித்துக் கொண்டிருப்பது பொங்கலுக்கு ஊருக்குப் போவது பற்றித்தான். அப்படி ரயிலில் பொங்கலுக்கு ஊருக்குப் போகும்போது, இந்த வாட்ஸ்ஆப் சேவை பற்றி நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டு... மேலும் பார்க்க

எதிர்காலம் போர் அல்ல, அமைதிதான்: பிரதமர் மோடி

இந்தியா சொல்வதை உலகம் கேட்கிறது, எதிர்காலம் போரில் இல்லை அமைதியில்தான் உள்ளது எனப் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். புவனேஸ்வரில் நடைபெற்ற பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டு ... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவர் முதல்.. எம்எல்ஏ வரை.. மாத ஊதியம் எவ்வளவு?

புது தில்லி: ஒரு தனி மனித வாழ்க்கையில் ஊதியம் என்பது மிகவும் அத்தியாவசியமானது, அது தினக்கூலியாகவோ, மாத ஊதியமாகவோ, தொழில் லாபமாகவோ, முதலீடுகள் மூலம் கிடைக்கும் வட்டியாகவோ இருக்கலாம். ஆனால், ஒவ்வொரு மாத... மேலும் பார்க்க

'எமர்ஜென்சி' படத்தைப் பார்க்க கங்கனா அழைப்பு! ராகுல், பிரியங்காவின் பதில் என்ன?

தான் நடித்துள்ள 'எமர்ஜென்சி' திரைப்படத்தைப் பார்க்க காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்திக்கு நடிகையும் பாஜக எம்.பி.யுமான கங்கனா ரணாவத் அழைப்பு விடுத்துள்ளார். முன்னாள் பிரதமர் இந்திரா க... மேலும் பார்க்க

கூட்ட நெரிசலில் 6 பக்தர்கள் பலி: திருப்பதி செல்கிறார் சந்திரபாபு நாயுடு!

திருப்பதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் 6 பேர் பலியானதைத் தொடர்ந்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று(வியாழக்கிழமை) திருப்பதி செல்கிறார். திருப்பதி திருமலையில் வைகுண்ட ஏகாதசியின்ப... மேலும் பார்க்க

முல்​லைப் பெரி​யாறு அணை விவ​கா​ரம்: மத்​திய அரசு மீது உச்​ச​நீ​தி​மன்​றம் அதி​ருப்தி

​ந​மது நிரு​பர்" நாடா​ளு​மன்​றத்​தால் இயற்​றப்​பட்ட அணைப் பாது​காப்​புச் சட்டம் இருந்​தும், நிர்​வா​கம் இன்​னும் நீண்ட தூக்​கத்​தி​லி​ருந்து மீள​வில்லை' என்று முல்​லைப் பெரி​யாறு அணை தொடர்​பான வழக்​கி... மேலும் பார்க்க