செய்திகள் :

மத கஜ ராஜா வசூல் இவ்வளவா?

post image

மத கஜ ராஜா திரைப்படத்தின் மூன்று நாள் வசூல் விவரம் குறித்த தகவல் தெரியவந்துள்ளது.

இயக்குநர் சுந்தர். சி இயக்கத்தில் நடிகர்கள் விஷால், சந்தானம், வரலட்சுமி, அஞ்சலி உள்ளிட்டோர் நடித்த ’மத கஜ ராஜா’ திரைப்படம் கடந்த 2013 ஆம் ஆண்டு உருவாகி வெளியீட்டிற்குத் தயாரானது.

ஆனால், அப்படத்தைத் தயாரித்த ஜெமினி பிலிம் சர்கியூட் நிறுவனம் தங்களின் பழைய கடனை அடைப்பதற்காக அப்படத்தின் வெளியீட்டை ஒத்திவைத்தனர். தற்போது, இப்படம் பொங்கல் வெளியீடாக 12 ஆண்டுகள் கழித்து ஜன.12-ல் வெளியானது.

இதையும் படிக்க: பாலமேட்டில் இன்று ஜல்லிக்கட்டு: 1000 காளைகள், 900 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு!

நடிகர்கள் விஷால், சந்தானம், மனோபாலா ஆகியோரின் நகைச்சுவைக் காட்சிகள் பெரிதாகக் கவனம் பெற்றதால் படம் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. மேலும், விமர்சன ரீதியாகவும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த நிலையில், மத கஜ ராஜா திரைப்படம் 3 நாள்களில் உலகளவில் 12 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

'ஆம்பள’ திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகள்.. ஹிப்ஹாப் தமிழா பகிர்ந்த பதிவு!

சுந்தர்.சி இயக்கத்தில் நடிகர் விஷால் தயாரித்து நடித்த ‘ஆம்பள’ திரைப்படம் வெளியாகி இன்றுடன் (ஜன.15) 10 ஆண்டுகள் ஆகின்றது. கடந்த 2015 ஆம் ஆண்டு நகைச்சுவைக் கலந்த ஆக்‌ஷன் படமாக திரையரங்குகளில் வெளியான ஆம... மேலும் பார்க்க

23 தீவிரவாதிகள் கைது! வரைபடங்கள் மற்றும் வெடிகுண்டுகள் பறிமுதல்!

பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் 23 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.அம்மாகாணத்தின் லாஹூர் நகர் பகுதியில் பஞ்சாப் காவல் துறையினர் மேற்கொண்ட... மேலும் பார்க்க

மூடுபனியால் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதல்! 100 ஆடுகள் பலி! 3 பேர் படுகாயம்!

உத்தரப் பிரதேசத்தில் இன்று (ஜன.15) காலை நிலவிய மோசமான வானிலை மற்றும் மூடுபனியால் நெடுஞ்சாலையில் சென்ற வாகனஙக்ள் ஒன்றின் மீது ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. அம்மாநிலத்தின் அக்ரா-தில்லி நெடுஞ்சாலையில் இ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: வங்கதேசப் பெண்கள் 3 பேர் கைது!

மகாராஷ்டிர மாநிலம் தாணே மாவட்டத்தில் சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறி வாழ்ந்துவந்த வங்கதேசத்தைச் சேர்ந்த பெண்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.தாணேவின் உல்ஹாஸ் நகர் காவல் துறையினருக்கு கிடைத்த தகவலி... மேலும் பார்க்க

விரைவில் 'வாடிவாசல்' படப்பிடிப்பு!

விரைவில் 'வாடிவாசல்' படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.கங்குவா படப்பிடிப்பு முடிந்ததும் நடிகர் சூர்யா இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில்... மேலும் பார்க்க

ம.பி: காவலர்கள் முன்னிலையில் மகளை ஆணவக் கொலை செய்த தந்தை கைது!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டத்தில் திருமணம்m செய்ய மறுத்த மகளை காவலர்கள் முன்னிலையில் அவரது தந்தை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுள்ளார்.குவாலியர் மாவட்டம் கோலா கா மந்திர் எனும் பகுதியைச் சேர... மேலும் பார்க்க