நூறு பெளர்ணமிகளுக்கு ஸ்டாலின் முதல்வராக தொடர்வார்: அமைச்சர் செந்தில் பாலாஜி
மத கஜ ராஜா, வணங்கான், காதலிக்க நேரமில்லை வசூல் நிலவரம்!
மத கஜ ராஜா, வணங்கான், காதலிக்க நேரமில்லை ஆகிய படங்களின் வசூல் நிலவரங்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வந்த படங்களில் மத கஜ ராஜா, வணங்கான், காதலிக்க நேரமில்லை ஆகிய 3 படங்கள் மட்டுமே ரசிகர்களிடம் கவனம் பெற்றன.
இதில் ஜன. 10 ஆம் தேதி வெளியான வணங்கான் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் இதுவரை ரூ. 8 கோடி வரை வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: மதுப்பழக்கம்... தற்கொலைக்கு முயற்சித்தேன்: பா. இரஞ்சித்
தொடர்ந்து ஜன. 12 ஆம் தேதி வெளியான விஷாலின் மத கஜ ராஜா ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்று பல திரைகளில் அரங்கம் நிறைந்த காட்சிகளாகவே ஓடிக்கொண்டிருக்கிறது. 12 ஆண்டுகள் கழித்து வெளியான இப்படம் ஆச்சரியப்படுத்தும் விதமாக இதுவரை ரூ. 33 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல், இயக்குநர் கிருத்திகா உதயநிதி - ரவி மோகன் கூட்டணியில் உருவான காதலிக்க நேரமில்லை திரைப்படம் ஜன. 14-ல் வெளியானது. தன்பாலின ஈர்ப்பு, திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும் முறை என நவீன காதல் கதையாக உருவான இது ரூ. 7 கோடி வரை வசூலித்துள்ளதாம்.
இதில், மத கஜ ராஜா மற்றும் வணங்கான் படங்களின் வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.