செய்திகள் :

மத யானை சாணத்தில் ஸ்பிரே, புகை, மிளகாய் தூள் தோரணம் - பந்தலூர் யானையை விரட்ட மாற்றி யோசித்த வனத்துறை

post image

அரிசி சுவைக்கு பழக்கப்படுத்தப்பட்ட இளம் ஆண் காட்டு யானை ஒன்று, நீலகிரி மாவட்டத்தின் பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குடியிருப்புகளைச் சேதப்படுத்தி அரிசியை எடுத்து உட்கொண்டு வருகிறது. மிகவும் பலவீனமான நிலையில் இருக்கும் பழங்குடிகள், தேயிலை தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்புகளை சேதப்படுத்தி உள்ளே நுழைவது எளிதாக இருப்பதால், அந்த பகுதிகளில் தொடர்ந்து நடமாடி வருகிறது.

மிளகாய் தூள் தோரணம்

நள்ளிரவில் வீடுகளுக்குள் நுழையும் குறிப்பிட்ட அந்த யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். தனிக்குழு அமைத்து அந்த யானையைக் கண்காணித்து வந்த நிலையில், யானை ஊருக்குள் நுழையாமல் இருக்க மதம் பிடித்த யானையின் சாணத்தில் ஸ்பிரே, புகை மற்றும் மிளாகாய் தூள் தடவப்பட்ட துணி தோரணம் என மாற்று வழிமுறைகளில் களம் இறங்கியிருக்கிறது வனத்துறை.

இந்த புதிய யுக்தி குறித்து தெரிவித்த வனத்துறை அதிகாரிகள், "பகலில் வனப்பகுதியில் மேய்ச்சலில் இருந்தாலும் அரிசியின் சுவைக்கு பழக்கப்பட்ட இந்த யானை, இரவில் ஊருக்கு வருகிறது. டிரோன் கேமராக்கள், கும்கி யானைகள் , இரவிலும் கண்காணிக்க தெர்மல் கேமிரா என பல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. மதம் பிடித்த ஆண் யானையின் நடமாட்டம் இருக்கும் பகுதிகளை மற்றொரு ஆண் யானை தவிர்க்கும் என்பதால்,

மிளகாய் தூள் தோரணம்

முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமில் தற்போது மஸ்தில் இருக்கும் யானைகளின் லத்தி எனப்படும் சாணத்தைச் சேகரித்து வந்து பல பகுதிகளிலும் தெளிக்கப்படுகிறது. யானை சாணத்தை நெருப்பில் போட்டு புகை உண்டாக்கப்படுகிறது. வீடுகளின் கதவுகள், ஜன்னல்களில் மிளகாய் தூள் தடவப்பட்ட துணிகளால் தோரணம் கட்டப்பட்டுள்ளது. இதனால் அந்த யானை ஊருக்குள் நுழையாமல் இருக்கும் என நம்புகிறோம்" என்றனர்.

''எல்லாம் ஒரு வாய் ரேஷன் அரிசிக்காகத்தான்...'' - நீலகிரி ஒற்றை யானை குறித்து சூழலியல் எழுத்தாளர்

கடந்த சில நாள்களாக நீலகிரி மாவட்டத்தின், பந்தலூர் பகுதியில் நுழைந்த ஆண் யானை ஒன்று, நள்ளிரவில் குடியிருப்புப் பகுதிகளில் நுழைந்து வீடுகளின் ஓடு மற்றும் கதவு, ஜன்னல்களை உடைத்து, வீடுகளுக்குள் நுழைந்து ... மேலும் பார்க்க

நெல்லையில் கொட்டப்பட்ட கேரள மருத்துவக் கழிவுகள்; லாரிகள் கொண்டு வந்து அகற்றிய கேரள அதிகாரிகள்

நெல்லையில் கொட்டப்பட்ட கேரள மருத்துவக் கழிவுகள்.! லாரிகள் கொண்டு வந்து அகற்றிய கேரளா.! மேலும் பார்க்க

அரிசி தேடி வீடுகளுக்குள் நுழையும் யானை; வனத்துக்குள் விரட்ட கும்கிகளுடன் களமிறங்கிய வனத்துறை!

அரிசி சுவைக்கு பழக்கப்பட்ட ஆண் காட்டு யானை ஒன்று நீலகிரி மாவட்டத்தின் பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பழங்குடிகள் மற்றும் தேயிலை தோட்ட குடியிருப்பு பகுதிகளில் அரிசி தேடி நடமாடி வருகிறது. நள்ளிரவ... மேலும் பார்க்க

Tiger : முதுமலை காட்டில் இறந்து கிடந்த புலி - கள ஆய்வில் இறங்கிய வனத்துறை!

வங்கப் புலிகளை அதிக எண்ணிக்கையில் கொண்டிருக்கும் காடுகளில் ஒன்றாக இருக்கிறது நீலகிரி மாவட்டத்தின் முதுமலை புலிகள் காப்பகம். பந்திப்பூர், முத்தங்கா சத்தியமங்கலம் உள்ளிட்ட வளம் நிறைந்த வனங்களும் முதுமலை... மேலும் பார்க்க

Antarctica: உலகின் மிகப் பெரிய பனிப்பாறை A23a நகரத் தொடங்கியது - இதனால் ஏற்படும் நன்மைகள் என்ன?

உலகின் மிகப் பெரிய மற்றும் பழைமையான பனிப்பாறைக்கு A23a என்று பெயர். நீண்ட நாட்களுக்கு ஒரே இடத்தில் இருந்த இந்த பனிப்பாறை மீண்டும் நகரத் தொடங்கியிருக்கிறது.முதன்முதலாக 1980களில் உலகின் மிகப் பெரிய பனிப... மேலும் பார்க்க

எட்டிப் பார்த்த ஒற்றைக் கொம்பன்; காத்திருந்த மராபூ நாரை - காசிரங்கா தேசியப் பூங்கா | Photo Album

காசிரங்கா தேசியப் பூங்காகாசிரங்கா தேசியப் பூங்காகாசிரங்கா தேசியப் பூங்காகாசிரங்கா தேசியப் பூங்காகாசிரங்கா தேசியப் பூங்காகாசிரங்கா தேசியப் பூங்காகாசிரங்கா தேசியப் பூங்காகாசிரங்கா தேசியப் பூங்காகாசிரங்க... மேலும் பார்க்க