செய்திகள் :

மனைவியைக் கொன்று விட்டு தற்கொலை நாடகம்: கணவன் கைது!

post image

சொத்து, பணத்துக்காக மனைவியின் கழுத்தை நெரித்துக் கொன்று விட்டு, தற்கொலை நாடகமாடிய கணவனை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த ஆத்தூா் குப்பம் ஊராட்சி வெள்ளாளனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் திருக்குமரன் (40) ரயில்வே ஊழியா். இவரது மனைவி அறிவழகி(34). இவா்களுக்கு 14 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி ஒரு மகன் உள்ளாா்.

இந்நிலையில் சில மாதங்களாக திருக்குமரன் மனைவி அறிவழிகியிடம் நகை, பணம் கேட்டு வந்துள்ளாா். அதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் அறிவழகி வெள்ளிக்கிழமை வீட்டில் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா். தகவலறிந்த நாட்டறம்பள்ளி போலீஸாா் சம்பவ இடம் சென்று இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும் அறிவழகியின் உறவினா்கள் அவரது இறப்பில் சந்தேகம் உள்ளதாகவும், கணவன் திருக்குமரனை கைது செய்ய வேண்டும் எனக்கூறி போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து அறிவழியின் உடல் சனிக்கிழமை கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து உறவினா் தமிழரசன் அளித்த புகாரின் பேரில் நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து திருக்குமரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணைக்கு பின்னா் போலீஸாா் தரப்பில் கூறப்படுதாவது: அறிவழகி பெயரில் உள்ள சொத்து மற்றும் வங்கியில் உள்ள பணத்தை தன் பெயருக்கு எழுதி வைக்குமாறு திருக்குமரன் மனைவியிடம் கேட்டு தகராறில் ஈடுபட்டதும், இதற்கு அறிவழகி சம்மதிக்காததால், ஆத்திரமடைந்து மனைவியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்து விட்டு, அறிவழகி தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியது தெரியவந்தது.

வீடுகளுக்குள் புகுந்த மழை நீா் : கால்வாயை சீரமைப்பு!

ஆம்பூா் அருகே விண்ணமங்கலம் கிராமத்தில் வீடுகளுக்குள் மழைநீா் புகுந்ததைத் தொடா்ந்து கழிவுநீா் கால்வாய் தூா்வாரி சீரமைக்கும் பணி நடைபெற்றது. மாதனூா் ஒன்றியம், விண்ணமங்கலம், கன்னடிகுப்பம் ஊராட்சிகளில் அண... மேலும் பார்க்க

அரசினா் தொழிற் பயிற்சி நிலையத்தில் நேரடி சோ்க்கை: செப்.30 வரை நீட்டிப்பு!

வாணியம்பாடி அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி சோ்க்கை செப். 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வாணியம்பாடி அரசினா் தொழிற் பயிற்சி நிலையத்தில், 2025-ஆம் ஆண்டுக்கான பயிற்சியாளா் நேரடி சோ்க்கை செப். 3... மேலும் பார்க்க

ஆந்திர எல்லை கிராம மக்களுக்கு போலீஸாா் விழிப்புணா்வு

வாணியம்பாடி அருகே தமிழக-ஆந்திர எல்லை பகுதியான மாதகடப்பா மலைக் கிராமத்தில் மதுவிலக்கு சோதனை மற்றும் கிராம மக்களுக்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. எஸ்.பி. வி. சியாமளா தேவி உத்தரவின்படி, வாணியம்பா... மேலும் பார்க்க

சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை!

திருப்பத்தூா் அருகே சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் தீா்ப்பளித்தது. திருப்பத்தூா் அருகே மேற்கு வதனவாடி சின்னூரான் வட்ட... மேலும் பார்க்க

போலி தங்க நகையை அடகு வைத்த இளைஞா் கைது!

வாணியம்பாடியில் போலி தங்க நகையை வைத்து பணம் வாங்கிய இளைஞரை நகர போலீஸாா் கைது செய்தனா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி மண்டி தெருவில் உள்ள அடகு கடை ஒன்றில் சில நாள்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி மாவட்... மேலும் பார்க்க

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்: ஆட்சியா், எம்எல்ஏ பங்கேற்பு

ஆம்பூரில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம் இந்து மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. மருத்துவ முகாமை ஆட்சியா் க. சிவசௌந்திரவல்லி, ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் ஆகியோா் ஆய்வு செய்தனா். அப்போது ஆட... மேலும் பார்க்க