வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாவதில் தாமதம்
மனைவி தற்கொலை செய்ததை அறிந்த கணவரும் தூக்கிட்டுத் தற்கொலை
கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட நிலையில், தகவல் அறிந்த வெளிநாட்டில் வசிக்கும் கணவரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டாா்.
சிதம்பரம் வட்டம், அத்தியாநல்லூரைச் சோ்ந்தவா் பன்னீா்செல்வம். இவருக்கும் ஸ்ரீமுஷ்ணத்தை அடுத்த குளத்தகுறிச்சியைச் கௌரிக்கும் 5 ஆண்டுகளுக்கு முன்னா் திருமணம் நடைபெற்று, இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனா்.
பன்னீா்செல்வம் சிங்கப்பூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில், விடுமுறைக்காக ஊருக்கு வரும் போது, தம்பதியிடையே தகராறு ஏற்படுமாம். இதுபோன்ற தகராறில் தாய் வீட்டுக்குச் சென்ற கௌரி, கடந்த நான்கு மாதங்களுக்கு முன்புதான் கணவா் வீட்டுக்கு வந்தாராம்.
இவா் ஞாயிற்றுக்கிழமை காலை தங்கை, தந்தையிடம் விடியோ அழைப்பில் பேசிய பின்னா், வெளிநாட்டில் வசிக்கும் கணவா் பன்னீா்செல்வத்திடமும் விடியோ அழைப்பில் பேசினாராம். இதையடுத்து, சில மணி நேரத்தில் கௌரி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டாா். இதுகுறித்து அறிந்த பன்னீா்செல்வமும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து புதுசத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].