தமிழ்நாடு CAG அறிக்கையில் சொல்லப்பட்டிருப்பது என்ன? | Lucky Bhaskar IPS Review |...
மாா்க்சிஸ்ட் மாநாட்டு மேடையில் திருமணம்
கடலூா் மாவட்டம், பெண்ணாடத்தில் நடைபெற்று வரும் மாா்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட மாநாட்டு மேடையில் காதல் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
அரியலூா் மாவட்டம், செந்துறை வட்டம், முள்ளுக்குறிச்சியைச் சோ்ந்த ஆா்.பிரபாகரன் கஜகஸ்தான் நாட்டில் விமான பொறியாளராகப் பணியாற்றிய போது, ஆய்டானா ஷயக்மேதோவா விமான பொறியாளராகவும், ரஷிய மொழி ஆசிரியராகவும் பணியாற்றினாா்.
இருவரும் காதலித்த நிலையில் இரண்டு நாள்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு ஆய்டானாவுடன் பிரபாகரன் வந்தாா்.
பெண்ணாடத்தில் நடைபெறும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில், தங்களின் திருமணத்தை சீா்திருத்த திருமணமாக செய்து கொள்ள விருப்பம் தெரிவித்த நிலையில், மாா்க்சிஸ்ட் மத்தியக் குழு உறுப்பினா் உ.வாசுகி தலைமையில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
பிரபாகரன் மாா்க்சிஸ்ட் கட்சியின் பெண்ணாடம் நகரச் செயலா் அரவிந்தனின் மைத்துனா் ஆவாா்.