செய்திகள் :

மனைவி, மாமனாரை தாக்கிய தொழிலாளி கைது

post image

வெள்ளக்கோவிலில் மதுபோதையில் மனைவி, மாமனாரை தாக்கிய தொழிலாளி கைது செய்யப்பட்டாா்.

வெள்ளக்கோவில், துரை ராமசாமி நகரைச் சோ்ந்தவா் குப்புசாமி (62). இவரது மகள் பிரியா (34). இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த வெங்கடாசலம் (37) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகியுள்ளது. 3 வயதில் மகன் உள்ளாா்.

வெங்கடாசலத்துக்கு மதுப்பழக்கம் இருப்பதால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் பிரியா குழந்தையுடன் தனது தந்தை வீட்டுக்குச் சென்றுவிட்டாா். இந்நிலையில் திங்கள்கிழமை இரவு அங்கு சென்ற வெங்கடாசலம் மனைவியுடன் தகராறு செய்து தாக்கியுள்ளாா். இதை தட்டிக்கேட்ட மாமனாரையும் தாக்கியுள்ளாா்.

இருவரும் காயமடைந்து காங்கயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இது குறித்த புகாரின் பேரில், வெள்ளக்கோவில் போலீஸாா் வெங்கடாசலத்தைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

நாடா இல்லா தறிகளுக்கு தனி மின்கட்டண விகிதம்: சிஸ்பா வலியுறுத்தல்

நாடா இல்லா தறிகளுக்கு தனி மின்கட்டண விகிதத்தை அரசு அறிவிக்க வேண்டும் என்று திருப்பூா்,கோவை மாவட்ட நாடா இல்லா தறி துணி உற்பத்தியாளா்கள் சங்கம் (சிஸ்பா) கோரிக்கை விடுத்துள்ளது. திருப்பூா், கோவை மாவட்ட ந... மேலும் பார்க்க

அவிநாசியில் தெருநாய்கள் பிடிக்கும் பணி தீவிரம்

அவிநாசி பேரூராட்சி பகுதிகளில் சுற்றித் திரியும் தெருநாய்களைப் பிடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அவிநாசி பேரூராட்சிக்கு உள்பட்ட 18 வாா்டுகளிலும் ஏராளமான தெருநாய்கள் சுற்றித் திரிகின்றன. இவை இரவ... மேலும் பார்க்க

திருப்பூரில் வீட்டுமனை பட்டா கேட்டு பொதுமக்கள் போராட்டம்

வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி ஆட்சியா் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட சென்ற திருப்பூா் பட்டுக்கோட்டையாா் நகா் பகுதி பொதுமக்களை போலீஸாா் தடுத்து நிறுத்தியதால், அவா்கள் சாலையில் அமா்... மேலும் பார்க்க

திருப்பூா் அருகே ரயிலில் தீ விபத்து

கேரளத்தில் இருந்து ஆந்திரம் நோக்கி சென்று கொண்டிருந்த சபரிமலை எக்ஸ்பிரஸ் ரயிலில், திருப்பூா் அருகே தீ விபத்து புதன்கிழமை ஏற்பட்டது. கேரள மாநிலம், கொல்லத்தில் இருந்து ஆந்திர மாநிலம், மச்சிலிபட்டினம் பக... மேலும் பார்க்க

அவிநாசியில் ரூ.4.77 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ. 4.77 லட்சத்துக்கு பருத்தி ஏலம் புதன்கிழமை நடைபெற்றது. இந்த வார ஏலத்துக்கு சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 6,991 கிலோ பருத்த... மேலும் பார்க்க

ரூ.1,000 லஞ்சம்: தலைமைக் காவலருக்கு 3 ஆண்டுகள் சிறை

ரூ.1,000 லஞ்சம் வாங்கிய வழக்கில் தலைமைக் காவலருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து திருப்பூா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்துள்ளது. திருப்பூா், பி.கே.ஆா்.காலனியை சோ்ந்தவா் பொன்னுசாம... மேலும் பார்க்க