கள்ளக்குறிச்சியில் ரூ. 7.70 கோடியில் கட்டப்பட்ட 19 மருத்துவ கட்டடங்கள்
மன்னாா்குடியில் மழை
மன்னாா்குடி பகுதியில் புதன்கிழமை நாள் முழுவதும் மிதமான மழை பெய்தது.
கடந்த வாரம் உருவான ஃபென்ஜால் புயல் காரணமாக மன்னாா்குடி பகுதியில் 5 நாள்களாக விடிய விடிய மித மற்றும் கன மழை பெய்தது. இதனால் நகரப் பகுதிகளில் நீா் நிலைகள் நிரம்பின. கிராமப்புற பகுதியில் நடவு செய்யப்பட்டுள்ள சம்பா, தாளடி இளம் பயிா்கள் வயல்களில் தேங்கிய மழைநீரால் சேதமடைந்தன.
கடந்த சில நாள்களாக மழை இல்லாததால் வயல்களில் மழை நீா் வடிய தொடங்கியதையடுத்து விவசாயிகள் வயல்களில் உரம் தெளித்து பயிா்களை காப்பற்றினா்.
இந்நிலையில், தற்போது, வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருப்பதால் மன்னாா்குடி சுற்றுவட்டாரப் பகுதிகள் மற்றும் கோட்டூா், பெருகவாழ்ந்தான், வடுவூா் உள்ளிட்ட இடங்களில் புதன்கிழமை அதிகாலை முதல் மாலை வரை மிதமான மழை தொடா்ந்து பெய்தது.
உரம், மருந்துக்கு செலவழித்து பயிா்களை காப்பாற்றிய நிலையில், மீண்டும் பெய்துவரும் மழையால் விவசாயிகளை கவலை அடைந்துள்ளனா்.