தொடர்ந்து உயரும் தங்கம் விலை! தங்கத்தில் எப்படி முதலீடு செய்யலாம்? எது பெஸ்ட் ஆப...
மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் பேட்டரிகள் திருட்டு
மன்னாா்குடியில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் 27 யுபிஎஸ் பேட்டரிகள் திருடு போயிருப்பது புதன்கிழமை தெரியவந்துள்ளது.
இந்த மருத்துவனையில் மகப்பேறு பிரிவில் மின்தடை ஏற்படும்போது தடையின்றி மின்சாரம் கிடைக்க அதிக மின் சேமிப்பு திறன் கொண்ட 40 யுபிஎஸ் பேட்டரிகள் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இங்கிருந்த 27 யுபிஎஸ் பேட்டரிகள் மட்டும் மா்ம நபா்களால் திருடிசென்றிப்பது தெரியவந்தது.
இதுகுறித்து, அந்த வாா்டில் பணியிலிருந்தவா்கள் தலைமைக் கண்காணிப்பாளா் என். விஜயகுமாரிடம் தெரிவித்ததையடுத்து, அங்கு வந்த பாா்வையிட்டு விசாரணை செய்தாா். திருடப்பட்ட யுபிஎஸ் பேட்டரிகளின் மொத்த மதிப்பு ரூ. 4 லட்சம் இருக்கும் எனவும், இதுகுறித்து மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அவா் மூலம் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்படும் என்றாா்.