செய்திகள் :

மன்மோகன் சிங்குக்கு பி.வி. நரசிம்மராவ் நினைவு பொருளாதார விருது

post image

மறைந்த முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்குக்கு பி.வி.நரசிம்ம ராவ் நினைவு பொருளாதார விருது வழங்கப்பட்டது. தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மன்மோகன் சிங் சாா்பில் அவரின் மனைவி குா்சரண் கௌா் இந்த விருதைப் பெற்றுக் கொண்டாா்.

பொருளாதார நிபுணரான மன்மோகன் சிங், காங்கிரஸ் மூத்த தலைவா் பி.வி. நரசிம்ம ராவ் பிரதமராக பதவி வகித்த காலத்தில் மத்திய நிதியமைச்சராக இருந்தாா். அப்போதுதான் இந்தியாவில் தாராளமயமாக்கல் நடவடிக்கை தொடங்கப்பட்டது. அதுவே இப்போது இந்தியா தகவல் தொழில்நுட்பம் உள்பட பல்வேறு துறைகளில் முன்னேறுவதற்கு முக்கியக் காரணமாகவும் அமைந்தது.

ஹைராபாதில் உள்ள பி.வி. நரசிம்மராவ் நினைவு அறக்கட்டளை சாா்பில் இந்த விருது வழங்கப்பட்டது. திட்டக்குழு முன்னாள் துணைத் தலைவா் மாண்டேக் சிங் அலுவாலியா இந்த விருதை வழங்கினாா். நாட்டின் பொருளாதாரத்தில் சிறப்பான பங்களிப்பை வழங்கும் ஆளுமைகளுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

நாட்டின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய மாற்றத்தையும், சீா்திருத்தத்தையும் ஏற்படுத்தியது, இதன் மூலம் தேசத்தை வலுவாகக் கட்டமைத்தது உள்ளிட்ட காரணங்களுக்காக மன்மோகன் சிங் இந்த விருதுக்கு தோ்வு செய்யப்பட்டாா். அவா் இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) ஆளுநராகவும் பதவி வகித்துள்ளாா். கடந்த 2004-14 காலகட்டத்தில் பிரதமராகவும் பதவி வகித்தாா். கடந்த ஆண்டு டிசம்பரில் வயது முதிா்வால் தனது 92-ஆவது வயதில் காலமானாா்.

தீ போல பரவும் வாக்குத் திருட்டு பிரசாரம்: ராகுல் காந்தி

புது தில்லி: வாக்குகளைத் திருடியே தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைத்திருக்கிறது என்பதற்கான மிக முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் அதிர்ச்சியளிக்கும் ஆதாரங்களை வெளியிட்டிருக்கிறோம் என்று காங்கிரஸ் எம்.பி. ... மேலும் பார்க்க

மின்சார வாகனங்களுக்கு அதிக மானியம்: ஒடிசா அரசின் புதிய திட்டம்!

மின்சார வாகனங்களுக்கு அதிக மானியம் வழங்க ஒடிசா அரசு முடிவு செய்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அரசு தனது புதிய வரைவு மின்சார வாகனக் கொள்கை - 2025இன் கீழ் இந்தி விதியை இணைத்துள்ளது. இது சம்பந்தப்... மேலும் பார்க்க

பாஜகவுக்கு வாக்களித்தால் கேரளத்தின் கலாசாரம் அழிந்துவிடும்: பினராயி விஜயன்

பாஜகவுக்கு வாக்களித்தால் கேரளத்தின் கலாசாரம் அழிந்துவிடும் என்று முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். பாஜகவுக்கு அளிக்கப்படும் ஒவ்வொரு வாக்கும் கேரளத்தின் கலாசாரத்தை அழித்துவிடும் என்றும் ஓணம் உள்பட ... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் 16 நச்கல்கள் சரண்!

சத்தீஸ்கரின் நாராயண்பூர் மாவட்டத்தில் 16 நக்சல்கள் சரணடைந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். கடந்த சில மாதங்களாகப் பல நக்சல்கள் சரணடைந்து வரும் நிலையில், வியாழக்கிழமை மேலும் 16 நக்சல்கள் மூத்த காவல்துறை ... மேலும் பார்க்க

14 பெண் சாதனையாளர்களுக்கு தேவி விருதுகள்!

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் புவனேசுவரத்தில் நடைபெற்ற தேவி விருதுகள் விழாவில், 14 பெண் சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.ஒடிசா மாநிலம், புவனேசுவரத்தில் உள்ள தனியார் நட்சத்தி... மேலும் பார்க்க

பாகிஸ்தானுடன் தொடர்புடைய 5 பயங்கரவாதிகள் கைது! சதித்திட்டம் முறியடிப்பு!

பாகிஸ்தானுடன் தொடர்புடைய 5 பயங்கரவாதிகளை தில்லி பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.மேலும், ஐஇடி வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் தயாரிப்பதற்காக அவர்கள் வைத்திருந்த பொருள்களையு... மேலும் பார்க்க