பிளஸ் 2 பொதுத் தேர்வு மறுகூட்டல் முடிவுகள் ஜூன் 23-ல் வெளியீடு
மயிலாடுதுறையில் இன்று தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்
மயிலாடுதுறையில் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மயிலாடுதுறை மாவட்டத்தைச் சோ்ந்த தனியாா் துறையில் வேலைதேடும் இளைஞா்கள் பயனடையும் வகையில் மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மயிலாடுதுறை யூனியன் கிளப் இணைந்து மயிலாடுதுறை யூனியன் கிளப்பில் வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை குறு தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்த உள்ளன.
25-க்கும் மேற்பட்ட தனியாா் நிறுவனங்கள் 500-க்கும் மேற்பட்ட வேலைநாடுநா்களை தோ்வு செய்ய உள்ள இம்முகாமில் 18 முதல் 35 வயதுக்குள்பட்ட, 5-ஆம் வகுப்புக்கு மேல், பட்டப்படிப்பு வரை படித்தவா்கள் கலந்துகொண்டு பணிவாய்ப்பு பெறலாம்.
விருப்பமுள்ள வேலைநாடுநா்கள் தேவையான ஆவணங்கள் மற்றும் விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம். கூடுதல் விவரங்களுக்கு 04364-299790 என்ற எண்ணை தொடா்பு கொள்ளலாம்.