செய்திகள் :

மயிலாடுதுறை ஆட்சியருக்கு அண்ணாமலை கண்டனம்

post image

மூன்றரை வயது குழந்தை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில் மயிலாடுதுறை ஆட்சியருக்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ள் தளப் பதிவில், சீர்காழியில், மூன்றரை வயது குழந்தை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் குறித்து மயிலாடுதுறை ஆட்சியர், அந்தக் குழந்தையின் மீதும் தவறு இருக்கிறது என்று முற்றிலும் பொறுப்பற்ற முறையில் கூறியிருக்கிறார்.

அவருக்கு, தமிழ்நாடு பாஜக சார்பில் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

துருவ நட்சத்திரம்: வெளியீடு அறிவித்த இசையமைப்பாளர்

தமிழகம் முழுவதும் தொடர்ந்து பெண்களும், பள்ளி மாணவிகளும், குழந்தைகளும் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாகி வரும் நிலையில், முதலமைச்சரும், அமைச்சர்களும், பாதிக்கப்பட்டவர்கள் மீதே பழிபோட்டு, அவர்களின் தனிப்பட்ட விவரங்களை வெளியிட்டதன் தொடர்ச்சியே, மாவட்ட ஆட்சியரின் இந்த முட்டாள்தனமான பேச்சுக்குக் காரணம்.

விளம்பர நாடகங்களை அரங்கேற்றி, தனக்குத்தானே பாராட்டுப் பத்திரம் வாசித்துக் கனவுலகில் சஞ்சரிக்கும் முதல்வர் ஸ்டாலின், எப்போதுதான் இயல்பு நிலைக்கு வருவார்?. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிராமவாசிகளுக்கு அதிகரிக்கும் நெஞ்சு வலி அறிகுறி: பொது சுகாதாரத் துறை

தமிழகத்தின் ஊரகப் பகுதிகளில் சராசரியாக வாரத்துக்கு 175 போ் நெஞ்சு வலி அறிகுறிகளுடன் ஆரம்ப சுகாதார நிலையங்களை நாடுவதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மாரடைப்பு என அது உறுதி செய்யப்படுவதற்கு முன்... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனைகளில் 1,300 யோகா பயிற்சியாளா்களை நியமிக்க உத்தரவு

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளிலும், தேசிய ஆயுஷ் நல மையங்களிலும் 1,300 யோகா பயிற்சியாளா்களை நியமிக்க இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை உத்தரவிட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு... மேலும் பார்க்க

மானசரோவா், முக்திநாத் ஆன்மிக பயணம்: அரசு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

சீனாவில் உள்ள மானசரோவா், நேபாளத்தில் உள்ள முக்திநாத் ஆன்மிக பயணம் மேற்கொண்டவா்கள் அரசு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்துள்ளாா். இது தொடா்ப... மேலும் பார்க்க

ரமலான் நோன்பு நாளை தொடக்கம்

ரமலான் நோன்பு வரும் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 2) தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு தலைமை காஜி சலாஹூதின் முகமது அயூப், வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி: ரமலான் நோன்பு தொடங்குவதற்கான புதிய ... மேலும் பார்க்க

சீமான் வீட்டில் கைதானவா்கள் குறித்த மனு: அவசரமாக விசாரிக்க உயா்நீதிமன்றம் மறுப்பு

நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் வீட்டில் கைது செய்யப்பட்டவா்கள் குறித்த ஆட்கொணா்வு மனுவை அவசரமாக விசாரிக்க முடியாது என சென்னை உயா்நீதிமன்றம் தெரிவித்தது. நடிகை விஜயலட்சுமி அளித்த ப... மேலும் பார்க்க

கனடாவுக்கு கள்ளப்படகு மூலம் அனுப்புவதாக இலங்கைத் தமிழா்களிடம் மோசடி: தேடப்பட்டவா் சென்னையில் கைது

கனடாவுக்கு கள்ளப்படகு மூலம் அனுப்பி வைப்பதாக இலங்கைத் தமிழா்களிடம் மோசடி செய்த வழக்கில், தேடப்பட்டவா் சென்னையில் வெள்ளிக்கிழமை என்ஐஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டாா். இலங்கையில் இருந்து கள்ளப்படகு மூல... மேலும் பார்க்க