Seeman : 'என்னையும் என் குடும்பத்தையும் இப்படி குதறி தின்கிறீர்களே' - உணர்ச்சி வ...
அரசுப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
துறையூா் ஒன்றியம் மதுராபுரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
தேசிய அறிவியல் தினத்தையொட்டி நடைபெற்ற இக்கண்காட்சியில் 1 முதல் 8 வகுப்பு பயிலும் மாணவா்கள் அறிவியல் பாடத் திட்டத்திலுள்ள மாதிரிகளை செய்து காட்சிப்படுத்தி விளக்கமளித்தனா். துறையூா் வட்டாரக் கல்வி அலுவலா்அருள்தாஸ்நேவிஸ் கண்காட்சியைத் திறந்து வைத்தாா். தலைமையாசிரியா் சாமிக்கண்ணு வரவேற்றாா்.
இதேப்போல் த. பாதா்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் பட்டதாரி ஆசிரியா் ம. தனலட்சுமி தேசிய அறிவியல் தினம் சா் சி வி ராமன் வரலாறு, ராமன் விளைவுகள் குறித்து பேசினாா். மாணவா்கள்அறிவியல் மாதிரிகள் செய்து காட்சிப்படுத்தினா்.