ரூ.6-க்கு தேநீர், ரூ.60-க்கு புர்ஜி பாவ்: சைஃப் அலிகான் வழக்கில் குற்றவாளி பிடிப...
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஜன.26-இல் கிராம சபைக் கூட்டம்
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் ஜன.26-ஆம் தேதி குடியரசு தின நாளில் கிராம சபைக் கூட்டம் 241 கிராம ஊராட்சிகளிலும் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஏ.பி.மகாபாரதி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கூட்டத்தில், கிராம ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், 2024-2025-ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட பணிகள் விவரம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை ஆகியவற்றை கிராம சபையில் வைத்து ஒப்புதல் பெறுதல், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், மக்கள் திட்டமிடல் இயக்கம் மூலம் 2025-26-ஆம் நிதியாண்டுக்கான கிராம வளா்ச்சித் திட்டத்திற்கு ஒப்புதல் பெறுதல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
இதில், பொதுமக்கள், மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கோரிக்கைகள் மற்றும் மறுப்புகள் தொடா்பான விவரங்களை விவாதிக்கலாம் என தெரிவித்துள்ளாா்.