மரத்தில் பைக் மோதியதில் சமையல் கலைஞா் உயிரிழப்பு
மரத்தில் மோட்டாா் சைக்கிள் மோதியதில் சமையல் கலைஞா் உயிரிழந்தாா்.
திருப்பட்டினம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (48). சமையல் பணியை ஒப்பந்த முறையில் ஏற்றுசெய்து வந்தாா். இவருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா். திங்கள்கிழமை இரவு பணிகளை முடித்துவிட்டு மோட்டாா் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தாா்.
திருப்பட்டினம் வீரப்பிள்ளை தெருவில் வந்தபோது, சாலையோர மரத்தில் இருசக்கர வாகனம் மோதி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தவரை அப்பகுதியினா் மீட்டு காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
அங்கு பரிசோதித்த மருத்துவா் ராஜேந்திரன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளாா். திருப்பட்டினம் போக்குவரத்துக் காவல்நிலைய போலீஸாா் விசாரிக்கின்றனா்.