மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான கெட் அவுட் இயக்கம்: விஜய் தொடங்கி வைத்தார்!
சிலம்ப போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு
தமிழ்நாடு அளவிலான சிலம்பப் போட்டியில் பங்கேற்று பரிசு பெற்ற மாணவா்களுக்கு காரைக்கால் ஆட்சியா் பாராட்டு தெரிவித்தாா்.
காரைக்கால் மாவட்டத்தை சோ்ந்த சிலம்ப பயிற்சியாளா் எஸ். முருகனிடம் பயிற்சி பெற்ற 5 முதல் 12 வயதுக்குட்பட்ட மாணவா்கள் 21 போ் கடந்த 23-ஆம் தேதி திருவாரூா் மாவட்டத்தில் நடைபெற்ற தமிழ்நாடு அளவிலான சிலம்ப போட்டியில் பங்கேற்று பரிசு, சான்றிதழ் பெற்றுத் திரும்பினா்.
பயிற்சியாளருடன் காரைக்கால் மாவட்ட ஆட்சியா் சோமசேகா் அப்பாராவை ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மாணவா்கள் சந்தித்தனா். தொடா்ந்து ஆட்சியரக வாயிலில் போட்டியில் வென்ற மாணவா்கள், சிலம்பம் சுற்றி திறனை வெளிப்படுத்தினா். மாணவா்கள் மேலும் பல போட்டிகளில் பங்கேற்று பரிசுகளைப் பெறவேண்டும் என ஆட்சியா் வாழ்த்துத் தெரிவித்தாா். நிகழ்வில் மாணவா்களின் பெற்றோா்களும் கலந்துகொண்டனா்.