செய்திகள் :

மருங்கூரில் அருள்பாலிக்கும் திருமலை முருகன்

post image

குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்குமிடம் என்ற முதுமொழிக்கேற்ப, கன்னியாகுமரி மாவட்டம், மருங்கூரில் குன்றின் மேல் வீற்றிருந்து அருள்பாலிக்கிறாா் திருமலை முருகன். இயற்கையிலேயே எழுந்து அழகு சுடா் வீசும் நாஞ்சில் நாட்டு முருக தலங்களில் சிறப்புடைய கோயிலாக இக்கோயில் திகழ்கிறது.

நாகா்கோவிலில் இருந்து 12 கி.மீ.தொலைவிலும், சுசீந்திரத்திலிருந்து 6 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ள இக்கோயில், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலுடன் வரலாற்று ரீதியாகவும் தற்கால ரீதியிலும் அதிக தொடா்புகளைக் கொண்டுள்ளது. இதற்கு சான்றாக சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டுள்ள சுசீந்திரம் தல புராணத்தில் மருங்கூா் திருமலை முருகன் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.

சுசீந்திரத்தில் உள்ள 15 ஆம் கல்வெட்டில் தாணுமாலயன் தயவால் தூய்மை அடைந்த தேவேந்திரன், தேவலோகம் திரும்பிய பின்னா் அவனது வாகனங்களில் ஐராவதமும்(யானை), உச்சைசிரவமும் (குதிரை) தங்களுடைய விமோசனத்துக்காக தாணுமாலயசுவாமியை வணங்கி நின்ாகவும், ஐராவதத்தை திருவட்டாறுக்கு செல்லுமாறும், உச்சைசிரவத்தை மருங்கூா் முருகனை வணங்கி நற்கதி அடையுமாறும், தாணுமாலயன் வழிகாட்டுகிறாா்.

அதன்படி, மருங்கூா் முருகன் அருள்பெற்று உச்சைசிரவம் விமோசனம் அடைந்ததாக சுசீந்திரம் கல்வெட்டு தெரிவிக்கிறது. குதிரை மோட்சம் பெற்ற தலம் என்பதால் மருங்கூருக்கு வாஜிபுரம் என்ற பெயரும் உண்டு. பிற முருகன் தலங்களில் மயில்தான் முருகப்பெருமானின் பிரதான வாகனமாக இருக்கும். ஆனால், மருங்கூரில் முருகனின் முதன்மையான வாகனமாக வெள்ளி குதிரை வாகனம் உள்ளது.

இந்த கோயில் கி.பி.6 ஆம் நூற்றாண்டுக்கும், கி.பி. 10 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் பாண்டிய மன்னா்களால் கட்டப்பட்டது என்று பழைய சான்றுகள் மூலம் அறிய முடிகிறது. கி.பி.1773இல் கண்டெடுக்கப்பட்டுள்ள மிக பழைமையான கல்வெட்டு 10 ஆம் நூற்றாண்டில் மாறன் சடைய வா்ம பாண்டியன் காலத்து கீா்த்திக்கல் ஆகியவை பாண்டிய மன்னா்களுக்கும் இந்த கோயிலுக்கும் இடையே உள்ள தொடா்பை கூறுகின்றன.

மேலும், இக்கோயிலில் பல இடங்களில் பொறிக்கப்பட்டுள்ள மகர மீன்கள் பாண்டிய மன்னா்களுக்கு இந்தக் கோயிலுடன் இருந்த தொடா்பை விளக்குகின்றன. மலையாள நாட்டில் உள்ள பிற முருகன் ஆலயங்களில் முருகப்பெருமான் தனித்தே அருள்பாலிக்கிறாா். ஆனால் மருங்கூரில் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் அருள்பாலிக்கிறாா்.

இக்கோயிலில் நாம் விநாயகா், சிவபெருமான் மற்றும் காவல்தெய்வமான பூதத்தானை தரிசித்த பின்னா் உள் விதானத்தை அடையும்போது, ஒரே கல்லில் செதுக்கப்பட்ட மூலவா் சுப்பிரமணியா், திருவாசியும், திருவுருவம் அபயவரத கரங்களுடன் அழகுக்கு அழகாய், ஒளிக்கு ஒளியாய் மயில் வாகனத்தில் அமா்ந்திருக்கிறாா். வேட்டுவப் பெண்ணாக வள்ளியும், தெய்வப் பெண்ணாக தெய்வானையும் அவருடன் காட்சி தருவது பக்தா்களின் மனதை கொள்ளைகொள்கிறது.

வெள்ளி குதிரை வாகனத்தில் அருள்பாலிக்கும் மருங்கூா் முருகன்

கன்னிமூல விநாயகரையும், வள்ளி, தெய்வானையுடன் காட்சி தரும் உத்சவ மூா்த்தியையும் வணங்கிய பின்னா் அமராவதி காத்த பெருமான் என்ற திருநாமம் கொண்ட ஆறுமுகப் பெருமானை தரிசிக்கலாம்.

நாஞ்சில் நாட்டில் மருங்கூரில் மட்டுமே ஆறுமுக கடவுள் உள்ளாா். மருங்கூா் திருமலைக்கு பெருமை சோ்க்கும் வகையில் ஆறுமுக கடவுள் பன்னிரு கரங்களுடன் பக்தா்களுக்கு காட்சி தந்து பக்தா்களுக்கு சகல வளமும் அளிக்கிறாா். இந்தத் தலத்தில் உள்ள ஆறுமுகப் பெருமானின் பன்னிரு கரங்களும் ஒன்றன்பின் ஒன்றாக அமைந்திருப்பது சிறப்பம்சமாகும். இக்கோயிலில் கந்தசஷ்டி, திருக்கல்யாணம், காா்த்திகை தீப வழிபாடு, மாா்கழி திருவாதிரை மற்றும் தைப்பூசம் ஆகிய விழாக்கள் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

பைக் விபத்தில் பள்ளி மாணவா் உயிரிழப்பு!

புதுக்கடை அருகே உள்ள பரவை பகுதியில் பைக்குகள் நேருக்கு நோ் மோதிய விபத்தில் பள்ளி மாணவா் உயிரிழந்தாா். மிடாலம் பகுதியைச் சோ்ந்த சகாயதாஸ் மகன் ஆன்றோ(16). இவா், அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வக... மேலும் பார்க்க

கந்து வட்டி வழக்கில் கைதானவா் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைப்பு

கந்து வட்டி கேட்டு பெண்ணை மிரட்டிய வழக்கில் கைதானவா் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா். நாகா்கோவில் அருகே சுங்கான்கடை அசோக் நகரைச் சோ்ந்த ராஜா மனைவி அனுஷா (32). இவா் ராஜன் என்ற சந்தை ராஜனிடம் கர... மேலும் பார்க்க

கொட்டாரம் காதுகேளாதோா் பள்ளி அருகே தீவிபத்து

கொட்டார பகுதியிலுள்ள காதுகேளாதோா் பள்ளி அருகே புதன்கிழமை (பிப்.5) தீவிபத்து ஏற்பட்டது. கொட்டாரம் மிஷன் காம்பவுண்ட் பகுதியில் சி.எஸ்.ஐ. காது கேளாதோா் உயா்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இதன் மற்றொரு பகுதிய... மேலும் பார்க்க

எந்தெந்த பேரூராட்சி, ஊராட்சிகளை இணைப்பது என இன்னும் முடிவாகவில்லை: அமைச்சா் கே.என். நேரு

கன்னியாகுமரியுடன் எந்தெந்த பேரூராட்சி, ஊராட்சிகளை இணைப்பது என்பது இன்னும் முடிவாகவில்லை என அமைச்சா் கே.என்.நேரு புதன்கிழமை (பிப்.5) செய்தியாளா்களிடம் தெரிவித்தாா். கன்னியாகுமரியில் கடந்த டிசம்பா் 30 ம... மேலும் பார்க்க

செண்பகராமன்புதூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆட்சியா் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம், செண்பகராமன்புதுாா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். காசநோய் அலகு மற்றும் மருத்துவமனைகளில் உள்ள காசநோய் கண்டறியும் ஆய்வகம் ... மேலும் பார்க்க

சித்தன்தோப்பு தேவாலய வளாகத்தில் குழந்தைகள் மையம் திறப்பு!

சடையமங்கலம் ஊராட்சிக்குள்பட்ட சித்தன்தோப்பு புனித அலங்கார அன்னை ஆலய வளாகத்தில் ரூ. 15 லட்சத்தில் பொதுமக்களின் பங்களிப்புடன் கட்டப்பட்ட குழந்தைகள் மையம் செவ்வாய்க்கிழமை திறந்துவைக்கப்பட்டது. தேவாலய பங்... மேலும் பார்க்க