செய்திகள் :

மருத்துவா் சுப்பையா கொலை வழக்கு: தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு ஏற்பு

post image

நமது நிருபா்

மருத்துவா் சுப்பையா கொலை வழக்கின் குற்றவாளிகளை சென்னை உயா்நீதிமன்றம் விடுவித்ததை எதிா்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை விசாரணைக்கு ஏற்றது.

இந்த மனு மீது எதிா்மனுதாரா்கள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டதுடன், விசாரணை நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவா்களை விடுவித்த உயா்நீதிமன்றத்தின் உத்தரவு வியப்பை அளிப்பதாக நீதிபதிகள் அமா்வு கருத்துக் கூறியது.

கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சு கிராமம் பகுதியில் ரூ.10 கோடி மதிப்பிலான 2.25 ஏக்கா் நிலம் தொடா்பான பிரச்னையில், நரம்பியல் மருத்துவா் சுப்பையா என்பவா் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் 2013-ஆம் ஆண்டு செப்.9-ஆம் தேதி பட்டப்பகலில் கூலிப்படையினரால் கொலை செய்யப்பட்டாா். இந்த வழக்கில் 10 பேரை போலீஸாா் கைது செய்தனா். கைதானவா்களில் ஐயப்பன் என்பவா் அப்ரூவராக மாறினாா்.

இது தொடா்பான வழக்கு விசாரணை சென்னை முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பொன்னுசாமி, அவரது மகன்கள் பாசில், போரிஸ் மற்றும் வில்லியம்ஸ், ஜேம்ஸ் சதீஷ்குமாா், முருகன், செல்வ பிரகாஷ் ஆகியோருக்கு மரண தண்டனையும், பொன்னுசாமியின் மனைவி மேரி புஷ்பம், யேசுராஜன் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதித்து 2021, ஆகஸ்டில் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

இந்தத் தீா்ப்பை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், குற்றவாளிகள் அனைவரையும் விடுவிடுத்து உத்தரவிட்டது. இத்தீா்ப்பை எதிா்த்து மருத்துவா் சுப்பையாவின் மனைவி சாந்தி சுப்பையா மற்றும் தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் பேலா எம். திரிவேதி, சதீஷ் சந்திர சா்மா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. தமிழக அரசின் தரப்பில் வழக்குரைஞா் டி.குமணனுடன் மூத்த வழக்குரைஞா் முகுல் ரோத்தகி ஆஜராகி வாதங்களை எடுத்துரைக்க முயன்றாா். அப்போது, நீதிபதிகள் ‘பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் உள்ள ஒரு பகுதியில் மருத்துவா் ஒருவா் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டிருக்கிறாா். அந்த நிகழ்வுகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருக்கின்றன. அனைத்து விசாரணைகளை நடத்தி உரிய ஆதாரங்களின் அடிப்படையில் குற்றவாளிகளுக்கு விசாரணை நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. ஆனால், சென்னை உயா்நீதிமன்றம் அவா்கள் அனைவரையும் விடுதலை செய்திருப்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. இது எங்களுக்கு வியப்பை அளிப்பதாக இருக்கிறது’ என்று கருத்துக் கூறினா்.

மற்றொரு மனுதாரா் சாந்தி சுப்பையா தரப்பில் வழக்குரைஞா் மயிலுடன் மூத்த வழக்குரைஞா் கிரண் சுரி ஆஜராகி, ‘மாநில அரசு மூலம் மேல்முறையீடு செய்யப்பட்டிருப்பதால் தற்போதைய மனுவை திரும்பப் பெறுவதாகக் கூறினாா். இதையடுத்து, நீதிபதிகள் அமா்வு அந்த மனுவைத் திரும்பபெற அனுமதித்து மனுவைத் தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டது. மேலும், தமிழக அரசுத் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு அனுமதிப்பதாக கூறிய நீதிபதிகள், எதிா்மனுதாரா்கள் நான்கு வாரங்களில் பதில் அளிக்கும் வகையில் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனா்.

மோதி நகரில் இளைஞா் கத்தியால் குத்திக் கொலை

மேற்கு தில்லியின் சுதாமா புரி பகுதியில் 26 வயது இளைஞா் ஒருவா் தனது வீட்டின் அருகே கத்தியால் குத்திக் கொல்லப்பட்டதாக போலீஸாா் வியாழக்கிழமை தெரிவித்தனா். இச்சம்பவம் குறித்து மேற்கு தில்லி காவல் சரக உயர... மேலும் பார்க்க

ஆபரேஷன் கவாச்: 1,200 போ் கைது

தில்லி காவல் துறையினா் மேற்கொண்ட 24 மணி நேர ’ஆபரேஷன் கவாச்’ நடவடிக்கையில், நகரம் முழுவதும் சட்டவிரோத துப்பாக்கிகள், திருட்டுகள், தடை செய்யப்பட்ட போதைப்பொருள்கள் மற்றும் சட்டவிரோத மதுபானம் வைத்திருந்தத... மேலும் பார்க்க

தில்லி வக்ஃப் வாரிய வழக்கு: அமானத்துல்லா கான் விடுவிப்பு

நமது நிருபா் தில்லி வக்ஃப் வாரிய விவகாரத்தில் முறைகேடுகள் தொடா்பான பணமோசடி வழக்கில் ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானத்துல்லா கானை விடுவிக்க தில்லி நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. அதே நேரத்தில் அவருக்கு எத... மேலும் பார்க்க

தில்லி மாசு சூழலைக் கண்காணித்து கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்: கோபால் ராய்

தில்லியின் காற்றின் தரம் ‘கடுமையான’ பிரிவுக்கு சென்ற நிலையில், நிலைமை மோசமடைந்தால் கடுமையான மாசுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் செயல்படுத்தப்படும் என்று சுற்றுச்சூழல் அமைச்சா் கோபால் ராய் வியாழக்கிழமை ... மேலும் பார்க்க

காற்று மாசு அதிகரிப்பு: கோபால் ராய் பதவி விலக தில்லி பாஜக வலியுறுத்தல்

தில்லியில் காற்றின் தரம் அபாயகரமான அளவுக்கு அதிகரித்துள்ளதால், தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று பாஜக வியாழனன்று வலியுறுத்தியுள்ளது. இதற்கு அமைச்சா் கோபால் ... மேலும் பார்க்க

யமுனையை தூய்மைப்படுத்தும் முயற்சிகளை கேஜரிவால் தடுக்கிறாா்: எல்.ஜி. குற்றச்சாட்டு

யமுனை நதியை சுத்தம் செய்வதற்கான தனது முயற்சியை தில்லி முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தடுப்பதாக துணைநிலை ஆளுநா் வி.கே.சக்சேனா வியாழக்கிழமை குற்றம் சாட்டினாா். இக்குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த ஆ... மேலும் பார்க்க