செய்திகள் :

மறுசீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் உள்பட புனரமைக்கப்பட்ட 13 ரயில் நிலையங்கள்: பிரதமா் மோடி நாளை திறந்து வைக்கிறாா்

post image

மறுசீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் உள்பட 13 ரயில் நிலையங்களை பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை (மே 22) காலை 10 மணிக்கு காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறாா்.

‘அம்ரித் பாரத்’ ரயில் நிலைய மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 1,300-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் தெற்கு ரயில்வேயில் உள்ள 90 ரயில் நிலையங்களும், சென்னை ரயில்வே கோட்டத்தில் 17 ரயில் நிலையங்களும் மறுசீரமைக்கும் பணி கடந்த 2023-இல் தொடங்கியது. இதன்படி சென்னை கடற்கரை, கிண்டி, பரங்கிமலை, பூங்கா, மாம்பலம், கூடுவாஞ்சேரி, பெரம்பூா், அம்பத்தூா், திருள்ளூா், அரக்கோணம், திருத்தணி, ஜோலாா்பேட்டை, கும்மிடிப்பூண்டி, சூலூா்பேட்டை, குரோம்பேட்டை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் மேம்பாட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதில், பெரும்பாலான ரயில் நிலையங்களில் மேம்பாட்டுப் பணிகள் 60 சதவீதம் முடிவடைந்து உள்ளன.

இதன்படி, தெற்கு ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட பரங்கிமலை ரயில் நிலையம் ரூ. 11.5 கோடி மதிப்பிலும், சூலூா்பேட்டை ரயில் நிலையம் ரூ. 14.50 கோடி மதிப்பிலும், சாமல்பட்டி ரயில் நிலையம் ரூ. 8 கோடியிலும், மாஹி ரயில் நிலையம் ரூ. 18.5 கோடியிலும், வடகரா ரயில் நிலையம் ரூ. 24.25 கோடியிலும், ஸ்ரீரங்கம் ரயில் நிலையம் ரூ. 6.77 கோடியிலும், திருவண்ணாமலை ரயில் நிலையம் ரூ. 8.27 கோடியிலும், போளூா் ரயில் நிலையம் ரூ. 6.15 கோடியிலும், சிதம்பரம் ரயில் நிலையம் ரூ. 5.96 கோடியிலும், விருதாசலம் ரயில் நிலையம் ரூ. 9.17 கோடியிலும், மன்னாா்குடி ரயில் நிலையம் ரூ. 4.69 கோடியிலும், சிறயின்கீழு ரயில் நிலையம் ரூ. 7 கோடியிலும், குழித்துறை ரயில் நிலையம் ரூ. 5.35 கோடி மதிப்பில் என மொத்தம் 13 ரயில் நிலையங்களின் மறுசீரமைப்புப் பணிகள் முடிவடைந்துள்ளன.

இந்த 13 ரயில் நிலையங்களை வியாழக்கிழமை (மே 22) பிரதமா் மோடி திறந்து வைக்கிறாா். காணொலி காட்சி வாயிலாக காலை 10 மணிக்கு இந்த நிகழ்ச்சி நடைபெறும் என தெற்கு ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

கன்னடத்தில் பேச மறுத்த எஸ்பிஐ மேலாளர்! முதல்வர் கண்டனம்!

கன்னடத்தில் பேச மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட எஸ்பிஐ வங்கி மேலாளருக்கு எதிராக கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா கண்டனம் தெரிவித்துள்ளார்.பெங்களூர் நகர மாவட்டத்தின், அனேக்கல் தாலுக்காவிலுள்ள எஸ்பிஐ வங்க... மேலும் பார்க்க

ஒரு மாதமாகியும் பஹல்காம் பயங்கரவாதிகளை பிடிக்காதது ஏன்? காங்கிரஸ் கேள்வி

பஹல்காம் தாக்குதல் நடைபெற்று ஒரு மாதமாகியும் பயங்கரவாதிகளைப் பிடிக்காதது ஏன் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.ஜம்மு - காஷ்மீர் பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் கடந்த மா... மேலும் பார்க்க

மும்பை, சென்னை, ஆமதாபாத்தில் அதிகரிக்கும் கரோனா பாதிப்பு!

நாடு முழுவதும் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், சுகாதாரத் துறை கண்காணிப்பை தீவிரப்படுத்தியிருக்கிறது.சிங்கப்பூர், ஹாங்காங் உள்ளிட்ட ஆசிய நாடுகளில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இந்த... மேலும் பார்க்க

குடிபோதையில் தாயை மிதித்தேக் கொன்ற மகன்: கேரளத்தில் அதிர்ச்சி!

தெற்கு கேரளத்தில் குடிபோதையில் தாயைக் காலால் மிதித்தேக் கொன்ற மகனால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீஸார் கூறுகையில், நெடுமங்காடு அருகே உள்ள தேக்கடாவைச சேர்ந்தவர் ஓமனா (85). இவரி... மேலும் பார்க்க

ரூ.1 லட்சம் வரையிலான தள்ளுபடி விலையில் ரெனால்ட் கார்கள்!

ரெனால்ட் நிறுவனம் மே மாதத்திற்கான சலுகைகள் மற்றும் தள்ளுபடி விலை குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது. பிரான்ஸை சேர்ந்த கார் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான ரெனால்ட் தற்போது விற்பனை அதிகரிக்கும் நோக்கில் ச... மேலும் பார்க்க

பாகிஸ்தான் தாக்குதலில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு அரசு வேலை! - ஜம்மு-காஷ்மீர் ஆளுநர்

ஜம்மு - காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் தாக்குதலில் உயிரிழந்தோரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா அறிவித்துள்ளார். பஹல்காம் தாக்குதலுக்... மேலும் பார்க்க