அதிமுக உள்கட்சி விவகாரத்தில் திமுக தலையிடாது: அமைச்சா் துரைமுருகன்
மறுவெளியீடாகும் சில நேரங்களில் சில மனிதர்கள் திரைப்படம்!
இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கத்தில், நடிகர்கள் அசோக் செல்வன், மணிகண்டன் ஆகியோரது நடிப்பில் உருவான “சில நேரங்களில் சில மனிதர்கள்” திரைப்படம் மறுவெளியீடு செய்யப்படுகின்றது.
இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கிய, சில நேரங்களில் சில மனிதர்கள் எனும் திரைப்படம், கடந்த 2022 ஆம் ஆண்டு கரோனா கட்டுப்பாடுகளுக்கு இடையில் திரையரங்குகளில் வெளியானது.
நடிகர்கள் அசோக் செல்வன், மணிகண்டன், நாசர், ரித்விகா, அபி ஹசன், அஞ்சு குரியன் ஆகியோரது நடிப்பில் உருவாகி வெளியான இப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், ஏ. ஆர். என்டர்டெயின்மென்ட் மற்றும் டிரைடென்ட் ஆர்ட்ஸ் தயாரித்த இந்தத் திரைப்படத்தை, பிவிஆர் சினிமாஸ் நிறுவனம், வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகளில் மறுவெளியீடு செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கத்தில், நடிகர் அர்ஜூன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘பாம்’ திரைப்படம் வரும் செப்.12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: துல்கர் சல்மான் - 41 அப்டேட்!