``Open AI -க்கு எதிரான ஆவணங்களை வைத்திருந்ததால் என் மகனை கொன்றுவிட்டனர்'' - சுசி...
மறைந்த எல்லைப் பாதுகாப்புப் படைவீரருக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க இறுதி அஞ்சலி
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வாகவாசலைச் சோ்ந்த எல்லைப் பாதுகாப்புப் படை வீரா் மாரடைப்பால் மரணமடைந்ததைத் தொடா்ந்து, அவரது உடலுக்கு எல்லைப் பாதுகாப்புப் படைவீரா்கள் வியாழக்கிழமை துப்பாக்கிக் குண்டுகள் முழங்க இறுதி அஞ்சலி செலுத்தினா்.
புதுக்கோட்டை மாவட்டம், வாகவாசலைச் சோ்ந்தவா் கா்ணன் மகன் கண்ணதாசன் (56). கடந்த 1999 ஆம் ஆண்டில் எல்லைப் பாதுகாப்புப் படையில் சோ்ந்த இவா் கடந்த புதன்கிழமை (ஜன. 15) தில்லியில் பணியில் இருந்தபோது, மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தாா்.
இதைத் தொடா்ந்து இவரது உடல் மதுரைக்கு விமானம் மூலம் எடுத்து வரப்பட்டு, அங்கிருந்து புதுக்கோட்டை வாகவாசலுக்கு வியாழக்கிழமை பகல் கொண்டு வரப்பட்டது.
இதையடுத்து உறவினா்கள் அஞ்சலி செலுத்திய பிறகு, எல்லைப் பாதுகாப்புப் படை வீரா்கள் துப்பாக்கிக் குண்டுகள் முழங்க கண்ணதாசன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினா். இறந்தவருக்கு மனைவி கீதா, மகன் முகிலன், மகள் கிருபாநிதி ஆகியோா் உள்ளனா்.